உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

105

இல்லை; எழுதுவாரின் திறமைக்குத் தக எவ்வளவு உயர்ந்த நடையிலு மிருக்கலாம்.

ii. உரையாட்டு வரையும் முறை

1.

உரையாட்டிற்குரிய பொருளைப்பற்றிய கருத்துகளை யெல்லாம் கட்டுரைக்குக் குறிப்பதுபோற் குறித்துக்கொள்ளல் வேண்டும். உடன்பாட்டுப் பொருளன்றி உறழ்ச்சிப் பொருளாயின், (அஃதா வது மாறுபட்ட பொருளாயின்) மாறுபட்ட இருவர் கருத்துகளை யும் வேறுவேறு வரிசையிற் குறித்துக் கொள்ளல் வேண்டும்.

2. அங்ஙனங் குறித்த கருத்துகளைப் பின்பு ஏரண முறைப்படி ஒழுங்கு படுத்தல் வேண்டும். உடன்பாட்டுப் பொருளாயின், குறித்துக் கொண்ட கருத்துகளையெல்லாம், தொடர்ச்சி பிறழாதபடி உரை யாடும் இருவருக்கும் பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.

3.

4.

5.

ஒருவர் கூற்றான கட்டுரைக் கருத்துகட்கு முன்பின் முறைமை யான ஒரே மடி வரிசையும்; இருவர் கூற்றான உரையாட்டுக் கருத்துகட்கு முன்பின் முறைமையும் ஒருவர்பின் இன்னொருவர் முறைமையுமான இரு மடி வரிசையும்; அமைக்கவேண்டியிருப் பதை நன்றா-க் கவனித்தல் வேண்டும்.

உரையாட்டை நிகழ்த்தும் இல்பொருண் மக்கட்கு இடப்படும் பெயர், அவ்வக் கருத்திற் கேற்பப் பொருத்தமாயிருத்தல் வேண் டும். (எ-டு). தமிழனுக்குத் தமிழ்ப் பெயர்: மகமதியனுக்கு அரபிப் பெயர்; ஆங்கிலனுக்கு ஆங்கிலப் பெயர்; கிறித்தவனுக்கு விவி லிய அல்லது ஆங்கிலப் பெயர்)

இன்றியமையாத விடத்திலன்றி, அயல்நாட்டிலும் அயன் மொழி யிலும் வழங்கும் மக்கட் பெயர்களை அமைத்தல் கூடாது. அவற்றை அமைக்க நேரின், தமிழெழுத்திற் கேற்பத் தற்பவப் படுத்தியே அமைத்தல் வேண்டும்.

தமிழர் பெயரெல்லாம் தனித்தமிழி லிருத்தல் நன்று.

உரையாட்டு இயல்பா-த் தொடங்கி, இயல்பா-த்

தொடர்ந்து,

இயல்பா- முடிதல் வேண்டும்; திடுமெனத் தொடங்குதலுந் திடுமென முடிதலும் கூடா.

உரையாடுவோர் கூற்றுகள், கூற்று முறையிற் சுருங்கியிருத்தல் வேண்டுமே யன்றிச் சொற்பொழிவு முறையில் விரிபுபட்டிருத்தல் கூடாது.