உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இயன்றவரை படிப்போர்க்குங்

கேட்போர்க்கும் ம்

106

6. உரையாட்டு

இருத்தல் வேண்டும்.

இனிமையாயும், இறுதியில் ஒரு முடிந்த முடிபை உணர்த்துவ தாயும்,

கட்டுரைக்குக் கூறியவற்றுள் ஏற்பனவெல்லாம் இதற்குங் கொள்க.

i. 'கடவுள்

போலிகைகள்

உண்டா?' என்பதைப்பற்றி,

இரு மாணவ

நண்பரிடை நிகழ்ந்த உறழ்ச்சி உரையாட்டு.

ஐயம்பெருமாள்: வாரும் நண்பரே! வணக்கம், என்ன நெடுநாளா- உம்மைக் கண்ணிலேயே காணேன்!

அறிவுடைநம்பி: வணக்கம். என்ன இப்படிச் சொல்லுகிறீர்? நேற்றுக் கூட உம்மைப் பார்க்க உம் வீட்டிற்கு வந்தேனே! நீர் எங்கே யோ போ-விட்டீராம்.

ஐயம்பெருமாள்: ஆம். நீர் வந்ததாக வீட்டில் சொன்னார்கள். நான் பகுத் தறிவுக் கழகத்தில் ஒரு சொற்பொழிவு கேட்கப் போயிருந் தேன். அறிவுடைநம்பி: பின்னே என்னைக் குறை சொல்கிறீரே, நீர் போ- விட்டு! ஐயம்பெருமாள்: சரி . நீர் இப்போது நன்றாயிருக்கிறீரா?

அறிவுடைநம்பி: ஆம். கடவுளருளாலும் உம் நல்லெண்ணத்தாலும் நன்றாயிருக்கிறேன்.

ஐயம்பெருமாள்: என்ன, நீர் இன்னும் பழைய கருநாடகமாயிருக் கிறீர்? என் நல்லெண்ணத்தால் என்று சொன்னது சரிதான். கடவுளருளால் என்கிறீரே கடவுள் என்று ஒன்று இருக்கிறதா?

அறிவுடைநம்பி: ஆம் பின்னே இல்லையா? கடவுளில்லாமலா இந்த உலகமெல்லாம் நடந்துவருகிறது?

ஐயம்பொருமாள்: என்ன, அப்படிச் சொல்கிறீர்? நீர் கடவுளை என்றைக்காவது கண்டதுண்டா?

அறிவுடைநம்பி: நான் காணவில்லை. ஆனாலும், நம் முன்னோர்கள் கண்டிருக்கிறார்களல்லவா?