உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

107

ஐயம்பெருமாள்: முன்னோர் கண்டது இருக்கட்டும். நீர் கண்டீரா? அறிவுடைநம்பி: ஆம். நானும் அகக்கண்ணால் காணத்தான் செ-கி றேன். ஐயம்பெருமாள்: அகக்கண்ணால் காண்கிறதென்றா லென்ன? நீர் கருதுகிறதெல்லாம் அகக்கண்ணால் காண்கிறதுதான்.

அறிவுடைநம்பி: அப்படியா? இதோ ஒரு வீடிருக்கிறது. கட்டுகிறவ னில்லாமல் இவ் வீடு வந்திருக்குமா? அது போல், கடவுளில்லா மல் இவ் வுலகந் தோன்றியிருக்குமா? காரண மிருந்தால்தானே காரியந் தோன்றும்?

ஐயம்பெருமாள்: காரணமிருந்தால் காரியந் தோன்றும் என்பது சரி தான். இவ் வுலகத்தைத்தான் கடவுள் படைத்தார் என்கிறீர். அக் கடவுளைப் படைத்தவர் யார்?

அறிவுடைநம்பி: அவர் தாமா-த் தோன்றினார்.

ஐயம்பெருமாள்: அவர் தாமா-த் தோன்ற முடியுமானால், இவ் வுலகம் ஏன் தானா-த் தோன்றியிராது?

அறிவுடைநம்பி: அது இருக்கட்டும். கடவுள் தம்மை நம்பினவர்க்கு உதவி செ-கின்றாரே! பழைய காலத்தில் எத்தனையோ அடி யார்க்கு அருள் செ-திருக்கிறார். இப்போதும் அவரை நம்பிக் கேட்டவர்க்கெல்லாம் வேண்டியது கிடைக்கிறது. நானே எத் தனையோ முறை பல காரியங்களை வேண்டிப் பெற்றிருக் கின்றேன். இதற்கென்ன சொல்கிறீர்?

ஐயம்பெருமாள்: கடவுள் நம்புகிறவர்க்கு மட்டுமா இவ் வுலகத்தில்

வேண்டியது கிடைக்கிறது. நம்பாதவர்களுக்குக்கூடத்தான்

கிடைக்கிறது. சொல்லப்போனால், நம்பாதவர்களுக்குத்தான் அதிகமா-க் கிடைக்கிறது. எத்தனை பேரை எடுத்துக் காட்ட வேண்டும்? கடவுளை நம்பினவரெல்லாம், வறுமைப்பட்டும் நோப்பட்டும் பலவகையா-த் துன்பப்பட்டும், ளமை யிலேயே இறந்துபோக; நம்பாதவர்கள், பெருஞ் செல்வராகவும் வலியராகவும் நீடுவாழியராகவு மிருந்து, இந்திர இன்பத்தை நுகர்வதை நீர் கண்ணெதிரே காணவில்லையா?