உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அறிவுடைநம்பி : ஆம்; காண்கிறேன், ஆனால், அவர்களெல்லாம் திருந்தும்படி, கடவுள் அவர்களைக்கூடக் கொஞ்சக்காலம் விட்டுவைக்கிறார்; திருந்தினவர்களைத் தம்மிடம் முந்திச் சேர்த்துக்கொள்கிறார்.

ஐயம்பெருமாள்: கூடக் கொஞ்சக்காலம் விட்டுவைத்தும் திருந்தாத வர்களைக் கடவுள் என்ன செ-வார்?

அறிவுடைநம்பி: நரகத்தில் போடுவார்.

ஐயம்பெருமாள்: மக்கள் தாம் செ-த குற்றத்திற்குத் தக்கபடி, இவ் வுலகத்திலேயே அரசனால் தண்டிக்கப்படும்போது, அவர்களை ஏன் திரும்பவும் கடவுள் தண்டிக்கிறார்?

அறிவுடைநம்பி: அரசன் மாந்தனே யாதலால், அவனால்

கண்டு

பிடிக்கமுடியாத குற்றங்களுக்கெல்லாம் கடவுள் தண்டிக்கிறார்.

ஐயம்பெருமாள்: நரகம் எங்கே யிருக்கின்றது? நரகத் தண்டனை எப்போது? எப்படிப்பட்டது? எவ்வளவு காலம்? அதன்பின் என்ன நேரும்?

அறிவுடைநம்பி: அவற்றைப்பற்றித் திட்டமா-ச் சொல்ல முடியாது.

ஐயம்பெருமாள்: அப்படியானால் நரகத்தைப்பற்றி உமக்கு எப்படித் தெரியும்?

அறிவுடைநம்பி: பெரியோர்கள் எழுதிவைத்ததுதான்.

ஐயம்பெருமாள்: பெரியோர்கள் எந்தக் காலத்தில் எழுதி வைத்தார் கள்? அறிவில்லாத பழங் காலத்திலல்லவா? வரவர அறிவு வளர்ந்துவருவதை நீர் அறியவில்லையா? அறிவில்லாக் காலத் தில் எழுதிவைத்ததையா அறிவுள்ள காலத்தில் நம்புவது?

அறிவுடைநம்பி: எந்தக் காலத்தில் எழுதிவைத்தா லென்ன? நம்ப வேண்டியதை நம்பித்தானே ஆகவேண்டும்?

ஐயம்பெருமாள்: சரி, அந்தக் குருட்டுநம்பிக்கை யிருக்கட்டும், கடவுள் ஏன் திருந்தினவர்களை முந்திச் சேர்த்துக்கொள்கிறார்?

அறிவுடைநம்பி: வீட்டுலகில், அவர்கள் இவ்வுலகச்

சிற்றின்ப

வாழ்வினுஞ் சிறந்த பேரின்ப வாழ்வு நிலையாக வாழ்வதற்கு?