உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

109

ஐயம்பெருமாள்: ஓகோ! முதலுக்கே கேடாயிருக்கும் போது வட்டி யையுங் கேட்டாற்போல, கடவுளிருப்பதே ஐயத்தி லிருக்கும் போது நீர் வீடு நரகங்களையும் இழுத்துக்கொண்டு வருகிறீர். யார் பேரின்பத்தைக் கண்டது? எவராவது பேரின் பத்தைக் கண்டவர் இங்குத் திரும்பிவந்து யாரையுங் கூட்டிக் கொண்டு போனதுண்டா? நா- நீரிலுள்ள நிழலை நம்பித் தன் வாயிலுள்ள இறைச்சியை இழந்தாற்போல, ஏன் இல்லாத இன்பத்தை எண்ணிக்கொண்டு இருக்கிற இன்பத்தையும் இழக்கிறீர்கள்?

அறிவுடைநம்பி: சரி; பேரின்ப வாழ்வைப்பற்றி உமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், மக்கள் ஒழுக்கமா-வாழ்வதற்காவது கடவுளச்சம் இன்றியமையாத தென்பதை ஒத்துக்கொள்கிறீரா, இல்லையா?

ஐயம்பெருமாள்: அதெப்படி ஒத்துக்கொள்ள முடியும்? கடவுளச்ச மில்லாத ரசிய நாட்டில் மக்கள் ஒழுக்கமா யில்லையா? அங்கு தானே ஏழை யெளியவர்க்குப் பெரு நன்மை ஏற்பட்டிருக் கின்றது? கடவுளை நம்புகிறவரெல்லாம் ஏழைபாழைகளை ஏமாற்றிக்கொண்டிருக்க, நம்பாதவர்மட்டும் அவர்க்கு நன்மை செ-திருப்பது, உமது கூற்றுக்கு முரணாகவும் கொள்கைக்கு மாறாகவு மல்லவா இருக்கின்றது?

அறிவுடைநம்பி: சரி, நீர் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஆனா லும், கடவுளிருக்கிறார் என்பதை எங்ஙனம் எல்லாரும் நம்பும் படி மெ-ப் பிக்க முடியாதோ, அங்ஙனமே அவர் இல்லை யென்பதையும் மெ-ப்பிக்க முடியாது. இரு கொள்கைகளுக்கும் பல ஏதுக்களும் சான்றுகளும் இருக்கத்தான் செ-கின்றன. ஆனால், இவற்றுள் எது பாதுகாப்பானது என்பதை அறிந்து அதைக் கடைப்பிடிக்கவேண்டும். கடவுள் உண்மையில் இல்லை யென்றால், அதனால், நம்பினவர் நம்பாதவர் ஆகிய இருசா ரார்க்கும் கேடில்லை. ஆனால், ஒருவேளை அவர் இருந்து, அவரை நம்பினவர்க்கு இன்பமும் நம்பாதவர்க்குத் துன்பமும் ஏற்படுமானால், அப்போது என்ன செ-வது? ஆதலால் கடவுளிருக்கிறார் என்று நம்புவதுதானே நல்லது? இதையாவது ஒத்துக் கொள்கிறீரா, இல்லையா?

ஐயம்பெருமாள்: ஆம் இதை வேண்டுமானால் ஒத்துக்கொள்கிறேன்.