உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(ii) ஒருவரது சொற்பொழிவைப்பற்றி ஈராசிரிய மாணவர் நிகழ்த்திய

உடன்பாட்டுரையாட்டு

நக்கீரர்: வணக்கம் ஐயா!

மதியழகர்: வணக்கம் ஐயா!

நக்கீரர்: நேற்றுத் திருமலையாண்டார் ஆற்றிய சொற்பொழிவிற்கு வந்திருந்தீர்களா?

மதியழகர்: ஆம். வந்திருந்தேன். உங்களைக்கூட முன் விசி (bench) யிற் கண்டேன்.

நக்கீரர்: சொற்பொழிவு எப்படி இருந்தது?

மதியழகர்: எந்நாளும் போல்தான் இருந்தது. கடந்த பன்னீராண்டு களாகச் சொல்லிவரும் கருத்துகளைத்தாம் நேற்றும் சொன்னார். நக்கீரர்: அவர் சொன்ன கருத்துகளெல்லாம் உங்கட்கு உடன்பாடு தானா?

மதியழகர்: எங்ஙனம் உடன்பாடாகும்? ஆசிரியனாக இருந்து கொண் ஆசிரியனுக்கு மாறான கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியுமா? நக்கீரர்: உலகத்திலுள்ள அறிஞரெல்லாம் ஆசிரியர்க்குச் சம்பளம் குறைவென்று கூறும்போது, நேற்று அவர் சொன்னதைப் பார்த்தீர்களா? துவக்கப்பள்ளியாசிரியரும், நடுநிலைப்பள்ளி யாசிரியரும், உயர்நிலைப்பள்ளி யாசிரியரும், வருவது வாக் குங் கைக்கும் எட்டாது பெரும்பாடு படும்போது, அவர்க்குச் சம்பளம் அதிக மென்று கூறுவது, எத்துணை அறிவற்ற குறும்புத்தனமான கொடுங்கூற்று! முதற்றரக் கல்லூரிகளில் ஒரு சிலரான பேராசிரியர்க்குப் பெருஞ் சம்பளம் கிடைப்பினும், அதை அதிகமென்று எவர் சொல்ல முடியும்? பிற துறைகளி லுள்ள மேற்பதவியாளர் ஆயிரக்கணக்கா- வாங்கும்போது, ஆசிரியத் துறையிலுள்ளவர் மட்டும் ஏன் நூற்றுக்கணக்கா- வாங்குதல் கூடாது?

மதியழகர்: அவர் ஆசிரியரா யிருந்தால்தானே ஆசிரியத் தொழிலின் வறுமை தெரியும்?