உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

111

நக்கீரர்: இதற்கு ஆசிரியராகவா இருக்கவேண்டும்? ஆசிரியர் சம்பளந்தான் அனைவருக்கும் தெரியுமே!

மதியழகர்: ஆசிரியரும் பிறரைப்போல்தானே பட்டம் பெற்றவர் என்று அவர் கருதுகிறார் போலும்!

நக்கீரர்: ஆசிரியர் அறிவை அவர் பட்டத்தைக்கொண்டா அளந்தறி வது? பிறரெல்லாம் ஒரு தேர்விற்குரிய ஒரே தொகுதிப் புத்தகங் களைப் படித்துள்ளனர். அவர் படித்தவற்றுள்ளும் பெரும் பகுதியை மறந்திருக்கின்றனர். ஆசிரியரோ, ஆண்டு தோறும் வெவ்வேறு தேர்விற்குரிய புதுப்புது புத்தகத் தொகுதியைப் படிப்பதுமன்றி, தாம் படித்தவற்றை மறவாது போற்றியும் வருகின்றனர். ஆசிரியர் திறத்தை நோக்கின் ஆண்டுதோறும் ஒரு பட்டம் பெறுகின்றவராக வன்றோ அவரைக் கருத வேண்டும்? மேலும், ஆசிரியன் படிப்பிற்கும் மாணவன் படிப்பிற்கும் எத்துணை ஏற்றத்தாழ்வுளது! ஒரோ வொரு தலை மாணவர் தவிரப் பிறரெல்லாம் சிலபல தேர்வு வினாக்கட்கே விடையெழுதக்கூடியவராயிருக்க, ஆசிரியரெல்லாம் அவரவர் பாடத்தில் எல்லா வினாக்கட்கும் விடை யிறுக்கும் ஆற்றலரா யிருக்கின்றனரே!

மதியழகர்: நேற்று அவர் ஆசிரியர் சம்பளத்தைப்பற்றி மட்டுமா சொன்னார்? ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் விடுமுறை அதிகம் என்றுகூடச் சொன்னாரே!

நக்கீரர்: விடுமுறை எதற்காக விடுவது? மூளைக்கு ஓ-வு கொடுக்க வேண்டுமென்றன்றோ? பிற வேலைகளெல்லாம், பெரும் பாலும், ஒருநாட் போன்றே எந்நாளும் செ-யும் வழக்கமுறைப் பட்டவை. மாணவரும் ஆசிரியருமோ, மூளையை வருத்தி அரும் பொருளைக் கற்றும் ஆ-ந்தும் வருகின்றனர். அதிலும், மாணவர் மூளை மிக இளந்திருத்தலின், அவருக்கு மும்மாதத் திற்கொரு முறை விடுமுறையும் வெப்பம் மிக்க கோடைக் காலத்தில் நீண்ட விடுமுறையும் வேண்டியுள்ளன. ஆசிரியர் மாணவரிலும் வலிய மூளையரேனும் அன்றாடம் பாடத்தை ஆயத்தம் செ-து மாணவர் பயிற்சிகளைத் திருத்தவேண்டி யிருத்தலானும், விடுமுறையில் விடைத்தாள்களைத் திருத்தும் வேலை மூளுதலானும்,