உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இடையிடை படிப்பும் ஆரா-ச்சியும் சூழ்வும் நிகழ்தலானும், அவர்க்கும் மாணவர்க்குப்போல் விடு முறைகள் வேண்டுவனவே. இவற்றை யெல்லாம் நோக்காது, ஆசிரிய மாணவர்க்கு

விடுமுறையைக் குறைத்து வேலை நாளைப் பெருக்கவேண்டும் மென்று, குருட்டுத்தனமா-க் கூறுவது, என்னே பேதைமை!

மதியழகர்: அவர் கற்றறிந்தாலன்றோ அவருக்குக் கல்வியின் அருமை தெரியும்? ஏதோ நாலாவது முடித்த பின், சில உரை நடைப் புராணங்களையும் செ-தித்தாள்களையும் படித்துவிட்டு, இங்ஙனம் தம் மதிக்குத் தோன்றியவாறு என்னென்னவோ பேசுகின்றார். நக்கீரர்: அவர் உயர்தரக் கல்வியில்லாதவர் என்பது உண்மைதான். ஆயினும், ஒரு பொது மேடையேறிப்பேசும்போது, பொறுப் பாகவன்றோ பேசவேண்டும்? 'ஆசிரிய மாணவர்க்கு வேலை கொஞ்சம்; விடுமுறை மிகுதி', என்னும் போலிக்கூற்று, பொது மக்கள் உள்ளத்திலும் ஆசிரியப் பட்டறிவில்லாத அமைச்சர் பார்வையிலும், உண்மைபோலன்றோ தோன்றும்? ஏற்கென வே ஆசிரியச் சார்பாகக்

கண்ணோட்டமில்லாத நம் நாட்டில், இத்தகைய போலிக்கூற்றுகளைப் பரப்பின், ஆசிரியர்க்கு இப் போதுள்ள வசதிகளே அளவுக்கு மிஞ்சியவை என்பது பட்டு, மேற்கொண்டு அவர் முன்னேற்றத்திற்கும் உயர்விற்கும் இடமில்லாதன்றோ போகும்? துவக்கப்பள்ளியாசிரியர் நிலை யெல்லாம் எக்காலம் திருந்தும்?

மதியழகர்: ஆ! இவர் சொல்லினால் ஆசிரியர் முன்னேற்றம் நின்று விடுமா? நாட்டில் வேறு அறிஞர் இல்லையா? நீர் ஏன் இதற்கு இத்துணை மனவருத்தங்கொள்கின்றீர்? ஆசிரியர்க்கும் நற்காலம் வரத்தான் செ-யும்; பொறுமையாயிரும்.

நக்கீரர்: ஆம். நீர் சொல்வது சரிதான். நேற்றுக்கூட அவர் சொற் பொழி விற்குத் தலைமைதாங்கிய வழக்கறிஞர் மன்றவாணர், தம் பின்னுரையில் சொற்பொழிவாளரை வெட்டித்தான் பேசி னார். பேசுவதற்கு வேறு பொருளில்லாததினால்தான், சொற் பொழிவாளர்கூட அங்ஙனம் பேசநேர்ந்தது; ஆதலால், இதைச் சற்றும் பொருட்படுத்த வேண்டியதில்லை. நான் சென்று வருகிறேன். வணக்கம்.

மதியழகர்: வணக்கம்.