உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

113

பயிற்சி 1

பின்வருமாறு படைத்துரை உரையாட்டு வரைக:

(1) ஓர் ஆசிரியருக்கும் ஓர் அரசியற் கணக்கருக்கும் நிகழ்வது.

(2) ஓர் உழவனுக்கும் ஒரு கைத்தொழிலாளிக்கும் நிகழ்வது.

(3) ஒரு முதலாளிக்கும் ஒரு தொழிலாளிக்கும் நிகழ்வது.

(4) ஓர் அரசனுக்கும் ஓர் அமைச்சருக்கும் நிகழ்வது.

(5)

ஒரு பண்ணையாருக்கும் ஒரு பண்ணையாளுக்கும் நிகழ்வது. (6) இரு வழிப்போக்கரிடை நிகழ்வது.

பயிற்சி 2

பின்வருமாறு பாணிப்புரையாட்டு வரைக: (1) ஓர் எருதிற்கும் ஒரு குதிரைக்கும் நிகழ்வது. (2) ஓர் அரிமாவிற்கும் ஒரு நரிக்கும் நிகழ்வது.

(3)

ஒரு கழுதைக்கும் ஒரு நா-க்கும் நிகழ்வது. (4) ஒரு வீட்டெலிக்கும் ஒரு காட்டெலிக்கும் நிகழ்வது.

(5) இரு நா-களிடை நிகழ்வது.

(6) ஒரு வீட்டுக் கோழிக்கும் ஒரு கூண்டுக் கிளிக்கும் நிகழ்வது.

பயிற்சி 3

பின்வருமாறு பாணிப்புரையாட்டு வரைக:

(1) ஒரு புத்தகத்திற்கும் ஒரு செ-தித்தாளுக்கும் நிகழ்வது.

(2) ஓர் அச்சுப் பொறிக்கும் ஒரு கையச்சுப் பொறிக்கும் (type writer) நிகழ்வது.

(3) ஓர் எழுதுகோலுக்கும் (pencil) ஒரு தூவலுக்கும் (pen) நிகழ்வது.

(4) ஓர் உரலுக்கும் ஒரு மத்தளத்திற்கும் நிகழ்வது.

(5)

ஒரு நாற்காலிக்கும் ஒரு முட்டானுக்கும் (stool) நிகழ்வது.

(6) ஒரு தாள் நாணயத்திற்கும் ஓர் உலோக நாணயத்திற்கும் நிகழ்வது.

பயிற்சி 4

பின் வருபவற்றைப்பற்றி உரையாட்டு வரைக:

(1) தனியுடைமை, பொதுவுடைமை - இவற்றுள் எது நல்லது? (2) இந்தியப் பொதுமொழியாதற் கேற்றது ஆங்கிலமா? இந்தியா?