உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கருஞ்சேவகம் = பெருவீரச் செயல்

கருந்தமிழ் = கருகலான தமிழ்.

கருந்தரை, கருநிலம் = பாழ்நிலம், பயன்படாத நிலம்.

கருந்தலை = போரில் இறக்கும் தலை,முடிவு.

கருந்தனம் = பெருஞ்செல்வம், பொன்.

கருந்தாள் = அறுபட்ட தாளடி.

கருந்திட்டை, கருந்திடர் = பெரிய மேடு.

கருந்தொழில் = உறுதியான வேலைப்பாடு, கடுவுழைப்பு,

கொலைத்தொழில்.

கருநடம் = இழிதர நடம்.

கருநாக்கு = தீயநாக்கு.

கருநாக்கன் = கஞ்சன், தீயன்.

கருநாடகம் = இழிதர நாடகம், அநாகரிக நாடகம்.

கருநாழிகை = இரவு.

கருநாள் = அமங்கலநாள், தீநாள்.

கருநீலப்பிறப்பு = நரகநிலைக்குச் சிறிது மேற்பட்ட பிறவி

கருநூல் = சூரிய (செ-வினை)நூல்.

கருப்பு = பே-, பஞ்சம்.

கரும்பாடு = ஏரியில் அல்லது குளத்தில் கரைக்கும்

நீருக்கு இடையிலுள்ள நிலம்

கரும்பிறப்பு = நரகப்பிறவி

கருமகன் = சண்டாளன், கொல்லன்.

=

கருமகள் சண்டாளி.

கருமானம் = சூனியவித்தை.

கருமேனி = பொந்துடம்பு (தூலசரீரம்)

கருவலி = மிகுந்த பலம்.

கருவாளி = மதிநுட்பன்.

கருவினை = பாவம், தீவினை,

கருவூலம் = பொக்கிஷவறை,

கார்வினை = பாவத்தொழில், தீச்செயல்.

காரறிவு = மயக்கம் பொருந்திய அறிவு.