உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

செம்மை = செவ்வை, நேர்மை, ஒழுங்கு, துப்புரவு, அழகு, பெருமை, சிறப்பு, நன்மை.

செங்களம் = போர்க்களம்.

செங்கா- = பழுக்கும் பருவக்கா-

செங்கா-ப்புண் = பழுக்காத புண்.

செங்குணக்கு = நேர்கிழக்கு.

செங்குத்து = நேர்குத்து.

செங்கை = கொடைக்கை.

செங்கோடு = செங்குத்தான மலை.

செங்கோல் = நேர்மையான ஆட்சி, நேரான கோல். செஞ்ச,செஞ்செவே = நேராக, முழுதும்.

செஞ்சம்,செஞ்சு = நேர்மை), சரிமை(correctness), முழுமை. செஞ்செல் = நேர்மையான செயல்.

செஞ்செவியர் = செல்வர்.

செஞ்செழிப்பு = பெருஞ்செழிப்பு, ஏராளம்

செஞ்சொல் = திருந்திய சொல், வெளிப்படைச்சொல். செஞ்சோறு = அரசன் தன்பொருட்டுப் போரில் இறக்கக்

கருதிய வீரனுக்குக் காலமெல்லாம் அளிக்கும் சோறு,

செஞ்ஞானி = சிறந்த ஞானி.

செந்தட்டு = அந்தரத் தட்டு,தன்மேல் விழும் அடியைத் தடுக்கை, ஏவின காரியத்தைத் தட்டுகை.

செந்தமிழ் = இலக்கணத்தமிழ் துாய தமிழ்.

செந்தவிப்பு = செழிப்பு.

செந்தூக்கு = நேராகத் தூக்குகை.

செந்தொடை = மோனை யெதுகையில்லாத யாப்பு,

செந்நடை= செவ்விய நடை,

செந்நெறி = செவ்விய வழி, நன்னெறி.

செந்நிலம் = போர்க்களம்.

செந்நிறுவுதல் = நன்னெறியில் நிறுத்துதல்.

செம்பத்தி = உண்மையான அன்பு,

LO

5