உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

நீலம்

செம்பாகம், செம்பாதி, செம்பால், = நேர்பாதி.

செம்புண் =ஆறும் நிலையிலுள்ள புண்,

செம்பொருள் = நேர்பொருள், உண்மைப் பொருள்,

சிறந்தபொருள், கடவுள், அறம்.

செம்மல் = தலைமை, வலிமை, தலைவன், இறைவன்.

செம்மாத்தல் = இறுமாத்தல், மிகமகிழ்தல்.

செம்மொழி = நற்சொல், திருந்தியமொழி.

நீலன் = கொடியன்.

நீலி = கொடியவள்.

பசுமை=இளமை, ஈரம்,குளிர்ச்சி,அழகு, இனிமை. புதுமை, வேகாமை, பச்சுடம்பு, பச்சையுடம்பு = பிள்ளைப்பேற்றால் இளந்தவுடம்பு,

பச்சை = இடக்கர், வெளிப்படை.

பச்சைக்கள்ளன் = பெருந்திருடன்.

பச்சைக்குறவன் = பெரும்பாசாங்குக்காரன்.

பச்சைக்கொல்லன் = வேலைத்திறமையற்ற கொல்லன்.

பச்சைப்பதம்= கூலத்தின் முற்றாப்பருவம், நன்றா- வேகாத நிலை.

பச்சைப்புண் பசும்புண் = ஆறியிராதபுண், புதுப்புண்.

பச்சைப்புளுகன் = பெரும்பொ-யன்.

பச்சைப்பூ = பால்குடிக்கிற குழந்தை.

பச்சைப்பேச்சு = இடக்கர்ப்பேச்சு, மறையாப்பேச்சு.

பச்சைப்பொ- = முழுப்பொ.

பச்சைப் பசும்பொ-

=

பெரு முழுப்பொ-.

பச்சைமண் = இளங்குழந்தை

பச்சைவெட்டு = பக்குவம் செ-யப்படாத நிலை, பழுக்காதநிலை. பச்சைவெட்டுக்கல் =சுடாத கல்,

பசுங்குடி = யோக்கியமான குடி, உழவன்.

பசுந்தமிழ், பைந்தமிழ் = இனிய தமிழ்.

பசும்பை = வணிகர் தோளில் மாட்டிக்கொள்ளும் நீண்ட பை,