உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

வெள்ளறிவு = அவிவேகம்.

வெள்ளிடி

=

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கோடையில் மழைபெ-யாது இடிக்கும் இடி, எதிர்

பாராது திடுமென வரும் துன்பம்.

வெள்ளிடை, வெள்ளிடைமலை = மிகத் தெளிவாயிருப்பது.

வெள்ளிது = வெளிப்படையானது.

வெள்ளிலை = வெற்றிலை.

வெள்ளுயிர் = தூய ஆன்மா.

வெள்ளுருட்டு = வெற்றச்சுறுத்தம்.

வெள்ளுழவு = சிறிது ஈரமுள்ள நிலத்தில் உழும் உழவு.

வெள்ளெழுத்து

=

எழுத்து விளக்கமா-த் தெரியாமைக்கேதுவான பார்வைக்குறை (long sight).

வெள்ளென

=

அதிகாலையில், இருட்டுமுன், குறித்த காலத்திற்கு

முன்பே.

வெள்ளேடு = வெற்றேடு.

வெள்ளேறன் = பழுதான இரும்பு (scrap iron).

வெள்ளை = கள்ளமற்றவன்.

வெள்ளைக்கவி = பொருட்செறிவில்லாத பாட்டு.

வெள்ளைக்கோட்டி = பயனில்பேச்சு, பயனிலபேசும் அறிவிலார்

கூட்டம்.

வெள்ளைச்சொல் = எளிய சொல், திருந்தாச் சொல்.

வெள்ளைத் தமிழ் = எளிய நடைத் தமிழ்.

வெள்ளைத்தனம்

=

கள்ளமின்மை.

வெள்ளைநோக்கு = கள்ளமற்ற பார்வை.

வெள்ளைப்புண் = ஊன்வெளுத்து எளிதி லாறாத புண்.

வெள்ளைப்பூச்சு = தவற்றை மறைக்கை.

வெள்ளைப் பேச்சு = வெளிப்படையான பேச்சு, கள்ளமற்ற பேச்சு.

வெள்ளைபூசுதல் = தவற்றை மறைத்தல்.

வெள்ளைமகன் = மூடன்.

வெள்ளைமதி = அறியாமை, அறிவுக்குறைவு.

வெள்ளைமழை = சிறு மழை.