உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

201

கள். பிறப்புத் தடை ஏற்படுத்தும் காலமும் வந்துள்ளது. காலத்திற் கேற்பக் கருத்துகள் எங்ஙனம் மாறுபடு கின்றன!

3. உலகத்திற் பல அரசும் மக்கட்பெருக்கமும் உள்ளவரை போரும் பஞ்சமும் நீங்கா. உலக முழுவதும் ஒரு குடும்பம் என்னும் உணர்ச்சி யைப் பரப்புதல் வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் பிறநாட்டு மக்கள் குடியேறிக் கலப்பினம் அமைதல் வேண்டும். உலக முழுவதும் ஒரே ஆட்சிக்குட்பட வேண்டும். மக்கட் பெருக்கம் தடுக்கப்பட வேண்டும். உலக விளைவுப் பொருள்களைப் பன்னாட்டு மக்களும் பகிர்ந்து கொள்ளல் வேண்டும். உலக முழுவதிற்கும் ஒரே பொதுமொழியும், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரே சிறப்பு மொழியும் இருத்தல் வேண்டும். குலமத வரணச் சார்பற்ற கலப்பு மணங்கள் நடைபெறல் வேண்டும். இவற்றால் மண்ணுலகம் விண்ணுலகமாக மாறும்.

4. செல்வம் திடுமென்று நீங்கிவிடலாம். உயிர் நண்பர் உயிர்ப்பகை வராக மாறலாம். பெற்ற தா-தந்தையரும் பிள்ளைகளும் கைவிட்டு விடலாம். இன்பத்திலும் துன்பத்திலும் ஒட்டிநின்று,இறந்த பின்னும் பற்றுவிடா திருப்பது நாஒன்றே.

5. தன்னலம் பலதிறப்பட்டது. தனிப்பட்டவன் தன்னலம் ஒன்று; குடும்பத் தன்னலம் ஒன்று; குலத் தன்னலம் ஒன்று; நாட்டுத் தன்னலம் ஒன்று; மதத் தன்னலம் ஒன்று. இவை முறையே ஒன்றைவிட ஒன்று தீமை குறையினும், எல்லாம் தன்னலமே.

10. பொழிப்புரை வரைவு (Paraphrasing)

i. முன்னுரை

ஒரு செ-யுளின் பொருளையெல்லாம் உரைநடையில் திரட்டி வரைவது, பொழிப்புரை வரைவாகும்.

அரிதுணர் பொருளதான உரைநடைப் பகுதியை விளக்கி வரை வதையும், ஆங்கில இலக்கணியர் பொழிப்புரை வரைவின்பாற் படுத்துவர். தமிழில் அதைத் தெளிநடை வரைவு அல்லது விளக்க நடை வரைவு என்னலாம்.

ii. பொழிப்புரை வரைவின் பயன்கள்

1. ஒரு செ-யுளைக் கருத்தூன்றிப் படித்தல்.

2.

மறைந்தும் அரிதாகவுமுள்ள பொருளை அல்லது கருத்தை உணரப் பழகுதல்.