உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

3.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

உள்ளக் கருத்தைச் சொற்களால் வெளிப்படுத்துவதிற் பயிற்சி பெறுதல். 4. செ-யுட் பொருளை விளக்குந் திறம்பெறல்.

iii. சிறந்த பொழிப்புரையின் இயல்புகள் 1. நடை பெயர்ப்பு

ஒரு செ-யுளும் அதன் பொழிப்புரையும் ஒரே மொழிக் குரிய வாயினும், செ-யுளும் உடைநடையும் வெவ்வேறு மொழி போல் வேறு பட்டிருப்பதால், பொழிப்புரையானது மொழிபெயர்ப் பளவு முற்றும் நடைமாறுதல் வேண்டும். ஒரு மொழியினின்று இன் னொரு மொழியிற் பெயர்ப்பது மொழிபெயர்ப்பு, ஒரு நடையினின்று இன்னொரு நடையிற் பெயர்ப்பது நடைபெயர்ப்பு. நடைபெயர்ப்பு. மொழிபெயர்ப்பும் மொழிபெயர்ப்பும் நடைபெயர்ப்பும் மொழிவகையில் வேறுபடினும், பெயர்ப்பளவில் ஒருதன்மையவே. 2. முற்றக்கூறல்

பொழிப்புரை, தன் மூலத்திற் கூறப்பட்டுள்ள பொருள்களுள் ஒன்றையும் விடாது, முழுமையுங் கூறுதல் வேண்டும்.

ஆயினும், வேண்டாத சிறுபொருள்களை விட்டுவிடலாம்.

எ-டு. "பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன

என்னும் அடியில், 'பழம்படு' என்னுந் தொடரை விட்டுவிடலாம்.

3. தொகுதியா- நோக்கல்

ஒரு செ-யுள் முழுவதையும் ஒன்றாகக்கொண்டு, அதன் பொரு ளெல்லாவற்றையும் ஒருங்கு நோக்குதல் வேண்டும். ஒரு செ-யுளைப் பல பகுதியாகக் கொண்டு, அதைப் பகுதி பகுதியாக வோ அடியடி யாகவோ தொடர் தொடராகவோ பிரித்துப் பொழிப் புரை வரைதல் கூடாது. ஒரு செ-யுளை முற்றும் நோக்கி அதன் பொருள் முழுவதையும் ஒருங்கே யுணர்ந்தாலல்லது, அதற்குப் பொழிப்புரை வரையத் தொடங்குதல் கூடாது.

4. தனிநிறைவுடைமை

பொழிப்புரை தனிப்பட்ட உரைநடைப் பகுதியாகவும், தன்னில் தானே நிறைவுள்ளதாகவும், மூலத்தின் துணை சிறிதுமின்றி விளங்கக் கூடியதாகவும், இருத்தல் வேண்டும்.

மூலத்தை யறியாதவர், பொழிப்புரை ஒரு தனி யிலக்கியப் பகுதியாகக் கொள்ளுமாறு, அது எளிய இனிய இலக்கிய நடையில் எழுதப்பெறுதல் வேண்டும்.