உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

5. ஒன்றும் சேர்க்காமை

203

மூலத்திலுள்ளதைத் தவிர, வேறொன்றையும் பொழிப்புரையிற் சேர்த்துக் கூறுதல் தகாது,

ஆயின், பொருளை விளக்குதற்பொருட்டு, ஓரிரு சொற்களை யோ தொடர்களையோ சேர்த்துக்கொள்ளலாம்.

எ-டு. “பீலிசெ- சாகாடும் அச்சிறும்"

என்பதில், பீலி (மயில்தோகை) என்னும் பெயர்க்குமுன், 'மிகநொ-ய' (இலேசான) என்னும் பெயரெச்சத் தொடர்மொழியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

"எந்நாளும்

காப்பாரே வேளாளர் காண்" என்னும் பகுதிக்கு முன், 'உணவுப்பொருள்கள் ஏராளமா- விளைப்பதாலும், 'இயல்பாக வேளாண்மை யுடைமையாலும்', என்னும் தொடர்களைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும்

என்னுங் குறளுக்குப்பின், 'அதுபோல' ஏற்கெனவே தம் வலிய பகைவ ரொடு தம் திறமைக்கு மிஞ்சிப் பொருதவர், அதன் மேலும் பொரத் துணியின், அழிவையடைவர் என்னும் பகுதியைச் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.

பிறிதுமொழிதலணியா யமைந்த செ-யுள்கள் அல்லது பகுதிக ளெல்லாம், (மூலத்திற் கூறப்படாத ) உவமேயத்தொடு சேர்ந்தாலன்றிப் பொருள் நிரம்பாவாதலின், அவற்றிற்கு வரையும் பொழிப்புரைகளி லெல்லாம், மூலத்திலில்லாத உவமேயத்தையுஞ் சேர்த்துக்கூறுதல் இன்றியமையாததென்பது, அவற்றின் அணிப்பெயராலேயே பெறப்

படும்.

iv. பொழிப்புரையி லமையாத செ-யுளியல்புகள்

உரைநடைக்கில்லாத பல சிறப்பியல்புகள் செ-யுட் கிருத்தலின், எத்துணைச் சிறந்த புலவர் பொழிப்புரை வரையினும், மூலத்தின் சிறப்பு முழுவதையும் அதில் அமைத்துக்காட்டல் முடியாத காரிய மாகும். செ-யுட் செ-த புலவனே அதன் சிறப்பியல் பனைத்தையும் உரைநடையில் அமைத்துக்காட்ட முடியாதெனின், பிறருக்கு அது முடியாமையைப்பற்றிச் சொல்லவேண்டுவதே யில்லை.