உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஓசைக்கும் பொருளுக்குமுள்ள ஒன்றிய இணைப்பும், கேட்டார்ப் பிணிக்குந் தகைய மந்திரவாற்றலும், செ-யுட்கேயுரிய. இதனால், உரை நடையிற் காட்டக்கூடிய உணர்ச்சி செ-யுளிற் பன் மடங்கு வலியுறு கின்றது.

ஓசை சந்தம் வண்ணம் என்னும் இசை வரம்புகளும், சீர் அடி பா முதலிய உறுப்பு வரம்புகளும், மோனை எதுகை முதலிய தொடை நயங்களும், மடக்கு பிரிமொழிச் சிலேடை முதலிய சொல்லணிகளும், செ-யுள் மரபான சில சொல்வழக்குகளும், உரை நடையில் அல்லது பொழிப்புரையில் அமையா.

செ-யுள் போன்றே மோனை யெதுகை யமைத்து வரைந்த சில உரைநடை நூல்களும் உளவேனும், அவை செ-யுளைப் பின்பற்றின வே யன்றி உண்மையான உரைநடையாகா.

'வடசொற்களை வரம்பின்றி வழங்குவது வழுவாகும்' என்பது போலும், ‘எங்களூர் பெங்களூர்' என்பது போலும், ஒரோவிடத்து இயற்கையா- அமையும் மோனையெதுகைகள் உரைநடையில் விலக்கப்படா.

V. பொழிப்புரையில் மாற்றப்பட வேண்டிய

செ-யுளியல்புகள்

1. சொற்களும் சொல் வடிவங்களும்

சில உலகவழக்குச் சொற்கள் நல்லிசைப் புலவர் செ-யுளில் இடம்பெறுவதே யில்லை. அவற்றுக்குப் பதிலாக வேறு சொற்களே வழங்கும். அச் செ-யுட் சொற்களுக்குப் பதிலாக உலகவழக்குச் சொற் களையே பொழிப்புரையில் அமைத்தல் வேண்டும்.

டு: செ-யுட் சொல் உலகவழக்குச் சொல்

எ-டு:

அணல்

குறும்புள் (குறும்பூழ்)

சிவல்

நாவா-

தாடி

காடை

கதுவாலி (கவுதாரி)

கப்பல்

சில செ-யுட் சொற்கள் சிறப்புப் பொருள் குறிப்பன. அவற்றுக்கு நேரான உலகவழக்குச் சொற்கள் இல்லாவிடினும் அவற்றைப் பல சொற்களால் விளக்கி யெழுதலாம்.