உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

13

துளைக்கருவிகள்: குழல் ஊதினார், நாதசுரம் ஊதினார், இசைத்தார்; சங்கு ஊதினார், வா-வைத்தார், குறித்தார்; கொம்பு ஊதினார், வா- வைத்தார், குறித்தார்.

நரம்புக்கருவிகள்: கின்னரி (fiddle) இழுத்தார், இசைத்தார், எழுவினார்; யாழ் (வீணை) எழுவினார், உளர்ந்தார், முரன்றார், இசைத்தார்; தம்புரா மீட்டினார்; கோட்டு எழுவினார், இசைத்தார்; சித்தார் இசைத்தார், எழுவினார்.

கஞ்சக்கருவிகள்: சாலர் அடித்தார், தட்டினார்; முகர்சிங்கு அடித்தார்; சப்பளாக்கட்டை அடித்தார், தட்டினார்; கிறிக்கட்டை அடித்தர்.

பலவகைக் கருவிகள்: இயம் இயம்பினார்; இசைக்கருவிகளை இசைத்தார், இயக்கினார்.

(2) உண்டி வினைகள்

உண்பன: சோறு உண்டார், சாப்பிட்டார்; சாப்பாடு சாப்பிட்டார்; உணவு உண்டார். தின்பன: பலகாரம் தின்றார், சிற்றுண்டி அருந்தினார்.

பருகுவன: தண்ணீர் குடித்தார், காப்பி குடித்தார்; மோர் குடித்தார், உறிஞ்சினார் காப்பி சாப்பிட்டார், தண்ணீர் சாப்பிட்டார் எனக் கூறுதல் வழுவாம். (3) மழை வினைகள்

மழை தூறினது, மழை பெ-த்து, மழை பொழிந்தது (சொரிந்தது), மழை கொட்டினது (ஊற்றினது).

வ் வினைகள், முறையே மேன்மேலும் வலிதா-ப் பெ-யும்

நிலைகளைக் குறிக்கும்.

(4) சினை வினைகள் i. அடிவினைகள்

அடிக்கீழ்ப்படுதல் குள்ளாதல்.

=

ஒருவன் இன்னொருவனுடைய ஆணைக்

=

அடிசா-தல் = அடியில் நிழல்சா-தல்.

=

அடிதிரும்புதல் அடியில் நிழல் சா-தல், உச்சிமேற் கதிரவன்

மேற்கு நோக்கிச் சா-தல்.

அடிதொடுதல் = பிறர் பாதந்தொட்டு ஆணையிடுதல்.

அடிநகர்தல் = இடம்விட்டுப் பெயர்தல்.

அடிப்படுதல் = கீழ்ப்படிதல்.