உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அடிபிடித்தல் = அடிச்சுவடு பற்றிப் போதல், தொடருதல், துப்பறிதல்.

அடிபார்த்தல் = நிழலளந்து பொழுதறிதல்.

அடிபிழைத்தல் = நெறிதவறி நடத்தல்.

அடிபிறக்கிடுதல் = பின்வாங்குதல், தோற்றோடுதல்.

அடிபெயர்தல், அடிபெயர்த்தல் = காலெடுத்துவைத்தல்.

அடியிரட்டித்தல் = முன்செல்லாமல் நின்ற இடத்திலேயே காலைத் தூக்கி வைத்தல்.

அடியிலேயறைதல், அடியுறைதல் = வழிபடுதல், அடிநிழலில் நிற்றல்,

ஒருவனுடைய பாதுகாப்பிற்குள்ளாதல்.

அடியொற்றுதல் = பின்பற்றுதல்.

அடிவிளக்குதல் = பாதங்கழுவி யுபசரித்தல்.

ii. கண்வினைகள்

கண்கலத்தல் = ஒருவரையொருவர் பார்த்தல், எதிர்ப்படுதல்.

கண்களவு கொள்ளுதல்

=

தான் பிறனைப் பார்ப்பதை அவன்

காணாதவாறு தான் அவனைப் பார்த்தல்.

கண்கனலுதல் = கோபத்தாற் கண்சிவத்தல்.

கண்காட்டிவிடுதல்

=

கண்சாடையால் ஏவிவிடுதல்.

கண்கெடச்செ-தல் = அறிந்திருந்து தீமைசெ-தல்.

(எ-டு. வேட்டைக்காரன் தன் கூட்டாளியைக் கண்கெடச் சுட்டான்.) கண்கெடப்பேசுதல் = கண்டொன்று சொல்லுதல்.

கண்சாத்துதல் = அன்போடு பார்த்தல்.

கண்சா-தல் = அறிவுதளர்தல், அன்புகுறைதல்.

கண்சுருட்டுதல்

மயக்க மாதல்.

=

அழகினால் வசீகரித்தல், ஒருவனுக்குத் தூக்க

கண்செறியிடுதல் = முழுதும் பரவி அடைத்துக்கொள்ளுதல்.

கண்டுகழித்தல்

=

வெறுப்புண்டாகும்வரை நுகர்ந்து விலக்குதல்,

தானே சமைத்துச் சுவை அல்லது உண்ணும் ஆர்வம் கெடுதல்.

கண்டுகாணுதல் = கவனமா-ப் பார்த்தல்.

கண்டுபாவித்தல் = ஒரு வினையைப் பின்பற்றிச் செ-தல்

(to imitate an action)

கண்ணகற்றுதல் = துயில்நீங்கி விழித்தல்.