உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

கண்ணடைதல்

15

=

பயிரின் குருத்து வெளித்தள்ளாமல் நின்று போதல்,

பால் முதலியன வேறுபட்டுக் கெடுதல்;

(எ-டு. கண்ணடைந்த பால்.)

கண்ணழித்தல் = பதவுரை கூறுதல்.

கண்ணறுதல் = அன்புகுறைதல், நட்புக்குலைதல், நீங்குதல்.

கண்ணாற்சுடுதல் = கண்ணேறு (திரு டி) படப் பார்த்தல். கண்ணார்வித்தல் = கண்ணுக்கு இன்பமூட்டுதல்.

கண்ணிற்றல் = எதிர்நிற்றல்.

கண்ணுக்குக்கண்ணாதல் = மிக அருமையான உறவாதல்.

கண்ணூறுகழித்தல்,

போக்குதல்.

கண்ணெச்சில்கழித்தல்

=

திரு டிதோஷம்

கண்ணெறிதல் = கடைக்கண்ணாற் பார்த்தல்.

கண்ணொட்டுதல் = கண் தூக்கநிலையடைதல்

கண்ணோடுதல் இரங்குதல்.

=

விரும்பிய பொருள்மேற் பார்வை செல்லுதல்,

கண்திறத்தல் = உருவ ஓவியங்கட்கு விழியமைத்தல், பருகுமாறு இளநீரைச் சீவுதல், சிலந்தி அல்லது கொப்புளம் நுனியில் உடை தல், வானம் வெளிவாங்குதல், அறிவு உண்டாகுதல், கல்வி கற்பித்தல்.

கண்தெறித்தல் = பெருவெளிச்சத்தாற் கண்ணொளி மழுங்குதல். கண்பசத்தல் = துன்பத்தாற் கண்ணின் நிறம் மாறுதல்.

கண்படுதல் = தூங்குதல், திரு டிபடுதல்.

கண்பரிதல் = மூட்டறுதல்.

கண்பறைதல்

=

கண்ணொளி குறைதல்.

கண்பிதுங்குதல் = வேலைக் கடினத்தால் வருத்தமிகுதல். கண்புதைதல் = அறிவுகெடுதல்.

கண்மலர்தல் = விழித்தல்.

கண்மாறுதல்

=

தோன்றி உடனே மறைதல், நிலைதாழ்தல், அன்பு

குறைந்து புறக்கணித்தல்.

கண்முகிழ்த்தல் = கண்மூடுதல், தூங்குதல்.

கண்மூடுதல் = இறத்தல்.