உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

கண்வழுக்குதல் = கண்கூசுதல்.

கண்வளர்தல் = தூங்குதல்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கண்வாங்குதல் = கண்ணைக் கவர்தல், கவனிப்பு நீங்குதல், தூர்வை

யெடுத்தல்.

கண்விடுதல் = துளையுண்டாதல்.

கண்விதும்புதல்

விரும்புதல்.

=

காதலர் ஒருவரையொருவர் விரைந்து காண

iii. கழுத்துவினைகள்

கழுத்திருந்து விடுதல் = பாரத்தாற் கழுத்து அமுங்குதல்.

(எ-டு. அவனுக்குக் கழுத்து இருந்துவிட்டது.)

கழுத்திற் கட்டுதல் = வலிந்து பொறுப்பாளியாக்குதல். கழுத்துக்கொடுத்தல் = தன் வருத்தம் பாராமற் பிறர் காரியத்தை ஏற்று

நிற்றல், வாழ்க்கைப்படுதல்.

கழுத்துமுறித்தல், கழுத்தை முறித்தல் = வருத்துதல்.

கழுத்தைக்கட்டுதல் = விடாது நெருக்குதல்.

iv. காது வினைகள்

=

காதறுத்தல் ஆவணத்தை (பத்திரத்தை) அறுதியாகத் தீர்த்துக் கிழித்தல்.

காதிலடிபடுதல் = ஒரு செ-தி அடிக்கடி கேட்கப்படுதல்.

காதுகிழித்தல், காதுகிள்ளுதல் = ஆவணத்தைத் தீர்த்துக் கிழித்தல். காதுகுத்துதல் = தாள் மூலையில் துளையிடுதல், வஞ்சித்தல்.

காதுபெருக்குதல், காதுவளர்த்தல்

துளையைப் பெரிதாக்குதல்.

=

காதுச் சோணையிலுள்ள

காதைக் கடித்தல் = காதோரமாக முகத்தை வைத்து மறைபொருள் சொல்லுதல், கோட்சொல்லுதல்.

V. கால் வினைகள்

கால்கிளர்தல் = ஓடுதல், படையெடுத்துச் செல்லுதல்.

கால்கெஞ்சுதல் = கால் ஓ-ந்து மேற்கொண்டு நடக்கமுடியாதிருத்தல்.

கால்கொள்ளுதல்

=

விழாவிற்குத் தொடக்கம் செ-தல், சிலை

செதுக்கக் கற்கொள்ளுதல், பரவி இடத்தை யடைத்தல்.