உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

vi. கை வினைகள்

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கைக்கோரணி காட்டுதல்

=

இறக்குந்தறுவாயிலிருத்தல்.

கைகலத்தல் = தழுவுதல், கூடுதல், சண்டையிடுதல்.

கைகவித்தல் = கைச்சாடையால் அடக்குதல், அபயமளித்தல்.

கைகாட்டுதல் = திறமை காட்டுதல்.

கைகாணுதல் = அனுபவத்தில் அறிதல்.

கை கெடுதல் = வறுமையடைதல்.

கைகொடுத்தல் = துன்பத்தில் உதவிசெ-தல், கை குலுக்கக் கை நீட்டுதல். கைகோத்தல் = நட்புச் செ-தல்.

கைச்சுழிப்படுதல், கைக்சுழியாதல் = சரியாக விதையாமையால் பயிர் சில விடத்திற் கூட்டமாக வளர்தல்.

கைசலித்தல் = கொடை ஓ-தல், வேளாண்மை (உபசாரம்) ஒழிதல். கைசோர்தல் = கைவிட்டுப்போதல், வறுமையடைதல்.

கைதலை வைத்தல் = பெருந்துயரடைதல்.

கைதளர்தல் = வறுமையடைதல்.

கை தருதல் = துன்பத்தில் உதவுதல்.

கைதாங்குதல் = கையால் தாங்குதல், கேடடையாமல் காத்தல்.

கைதாழ்தல் = செல்வநிலை தளர்தல்.

கைதிருந்துதல் = கையெழுத்து வினைத்திறமை முதலியன திருந்துதல்.

கைதீண்டுதல் = அடித்தல், தீய நோக்கொடு தொடுதல்.

கைதுடைத்தல் = விட்டு நீங்குதல்.

கைதூக்கிவிடுதல்

=

நீரில் அழுந்துவோரை எடுத்துக் காத்தல்,

வறுமையில் அல்லது துன்பத்திற் காத்தல்.

கைந்நிறுத்துதல் = நிலைநிறுத்துதல், அடக்குதல்.

கைநிமிர்தல் = வளர்ந்து பருவமடைதல்.

கைநீட்டுதல் = அடித்தல், கொடுத்தல், இரத்தல், திருடுதல்.

கைநீளுதல் = அடிக்கவோ, கொடுக்கவோ, திருடவோ கை நீளுதல்.

கைநனைத்தல் = பிறர் வீட்டில் பசியாற்றிக்கொள்ளுதல்.

கைநாட்டுதல் = கையெழுத்திடுதல்.