உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

கைநெகிழ்தல் = கைதவறவிடுதல்.

கைநொடித்தல் = செல்வநிலை கெடுதல்.

கைநொடுநொடுத்தல் = கண்டதெல்லாவற்றையும் தொடுதல். கைப்பாடுபடுதல் = கையால் உழைத்தல்.

கைப்பிடித்தல் = மணஞ்செ-தல்.

=

19

கைப்பிடியாப் பிடித்தல்

=

நேரிற் கையாற் பிடித்தல், கையுங்

களவுமா-ப் பிடித்தல்.

கைபார்த்தல் = உதவி நாடுதல். பொருள்களைத் தரம்பிரித்தல்.

கைபூசுதல் = உண்ட கையைக் கழுவுதல்.

கைபோட்டுக் கொடுத்தல்

=

கைபோட்டு ஒப்பந்தத்தை உறுதிப்

படுத்தல்.

கைம்மறித்தல் = கையால் தடுத்தல், கைகவித்து விலக்குதல்.

கைம்மிகுதல் = அளவுகடத்தல்.

கைமுகிழ்த்தல் = கைகூப்புதல்.

கைமாறுதல் = ஒருவர் கையினின்று மற்றொருவர் கைக்குச் செல்லு தல், வேலையாள் மாறுதல், கட்சி மாறுதல், ஒழுக்கம் மாறுதல். கையடித்தல் = கையடித்து உறுதி தருதல்.

கையடிப்படுதல் = ஒரு பொருள் பல கை கடந்து செல்லுதல். கையடைத்தல் = பிறர் கையில் ஒப்புவித்தல்.

கையமர்த்துதல்

=

கையாற் சைகை காட்டி அமைதியாயிருக்கச்

செ-தல், கையாற் சைகை காட்டி ஆள்களை அமர்த்துதல்.

கையயர்தல் = கைசோர்தல், நிலைமை தாழ்தல்.

கையரிக் கொள்ளுதல் = வாரி அரித்துக்கொள்ளுதல்.

கையழிதல் = செயலற்று வருந்துதல்.

கையறுதல் = ஒன்றுஞ் செ-யாமல் வருந்துதல்.

கையளித்தல் = ஒப்படைத்தல்.

கையிளைத்தல் = செல்வநிலை தளர்தல்.

கையுண்ணுதல் = பிறர் கையில் உண்டு வாழ்தல்.

கையைக் கட்டுதல் = ஒன்றும் செ-யாதபடி தடுத்தல்.

கையைக் கடித்தல் = நட்டமாதல்.

கையைக் குறுக்குதல் = செலவைக் குறைத்தல், கஞ்சனாதல்.