உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கையோடுதல் = வேகமாக எழுதுதல்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கையுதிர்க்கொள்ளுதல் = விட்டு விலகும்படி கையசைத்துக் குறிப் பிடுதல்.

கைவருதல் = ஒன்றைச் செ-யக் கையெழுகை, தேர்ச்சி பெறுதல்.

கைவற்றுதல், கைவறளுதல் = பொருளறுதல், கொடை ஓ-தல். கைவாரங் கொள்ளுதல் = அதிகாரத்தை மேற்கொள்ளுதல், கூத்தை நிறுத்தும்பொருட்டுக் கையை உயரவெடுத்து வீசுதல்.

கைவிதிர்த்தல் = மறுப்பு, அச்சம் முதலியவற்றைக் குறித்துக் கையசைத்தல். கைவிரித்தல் = இன்மை குறித்தல், கொடை மறுத்தல்.

vii. செவி வினைகள்

செவிக்கேறுதல் = கேட்டற் கினியதா யிருத்தல்.

செவிக்கொள்ளுதல் = கேட்டல்.

செவிசா-த்தல் = இணங்கிக் கேட்டல்.

செவி தின்னுதல் = மறைபொருளாக ஓதுதல்.

செவிப்படுதல் = கேட்கப்படுதல்.

செவிமடுத்தல் = கேட்டல்.

செவியடித்தல் = யானைபோலக் காதாட்டுதல்.

செவியறிவுறுத்துதல் = நல்லறிவு புகட்டுதல்.

viii. தலை வினைகள்

தலைக்கட்டுதல் = அன்பா- நடத்துதல், பாதுகாத்தல், ஒப்புவித்தல்.

தலைக்கூடுதல் = ஒன்றுசேர்தல், நிறைவேறுதல்.

தலைக்கேறுதல் = பித்தவேகம் தலைக்கேறுதல், செருக்கு முதிர்தல்.

தலைக்கை தருதல் = கையால் தழுவி அன்பு காட்டுதல்.

தலை கனத்தல் = செருக்கு மிகுதல்.

தலைகுலுக்குதல் = உடன்பாடு இகழ்ச்சி முதலியவற்றைக் குறிக்கத்

தலையசைத்தல்.

தலைச்செல்லுதல் = சென்று கூடுதல்.

தலைசிறத்தல் = மிகத் தலைமையாதல்.

தலைசுற்றியாடுதல், தலைசுற்றுதல்

செருக்குண்டாதல்.

=

இறுமாப்புக் கொள்ளுதல்,

தலை தடுமாறுதல் = கலக்கமடைதல், சீர்குலைதல்.