உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

தலைதொடுதல் = தலையைத் தொட்டு ஆணையிடுதல்.

21

தலைநின்றொழுகுதல் = தலைமையாக நின்று அல்லது அணுகி நின்று

பணிசெ-தல்.

தலைப்படுதல்

=

கூடுதல், எதிர்ப்படுதல், மேற்கொள்ளுதல்,

தலைமையாதல், தொடங்குதல்.

தலைப்போகுதல் = முடிவுவரை செல்லுதல்.

தலைமயங்குதல் = ஆள்நெருங்குதல், கலந்திருத்தல். தலைமேற்கொள்ளுதல் = மிகச் சிறப்பாயேற்றல், பொறுப்பேற்றல். தலையரங்கேறுதல் = தன் கல்வித்திறமையை முதல் முதல் அவை யோர்க்குக் காட்டுதல்.

தலையளி செ-தல்

=

முகமலர்ந்து இன்சொற் சொல்லுதல், சிறந்த

அன்பு செ-தல்.

தலையைத் தடவுதல் = வஞ்சித்தல், ஏமாற்றிப் பொருள் பெறல்.

=

தலைச்சவரம் பண்ணுதல், அளக்கும் படியின்

தலைவழித்தல் தலையைத் தட்டுதல்.

ix. நாக்கு (நா) வினைகள்

நாக்குச்சாதல் = நாக்குச் சுவையுணர்ச்சியை இழத்தல்.

நாக்குத் தட்டுதல் = திக்கிப்பேசுதல், பூட்டின் நாக்குக் கெடுதல்.

நாக்குத் தடித்தல் = நா மரத்துப்போதல்.

நாக்குத் தாளம்போடுதல்

=

உணவுகொள்ள ஆவலாயிருத்தல்,

அளவுகடந்து நகையாடுதல் (பரிகசித்தல்).

நாக்குத் திருந்துதல் = உச்சரிப்புத் திருத்தமாயிருத்தல்.

நாக்குத் தெறிக்கப் பேசுதல் = பெரியோரைப் பழித்தல்.

நாக்கு நீட்டுதல் = அளவுகடந்து பேசுதல்.

நாக்கு நீளுதல் = அடக்கமின்றிப் பேசுதல்.

(எ-டு: அவனுக்கு நாக்கு நீள்கின்றது)

நாக்குப் புரளுதல் = சொல் தவறுதல்.

நாக்கு வளைத்தல் = பழித்தல்.

=

நாக்கு வாங்கிப் போதல் இறும்பூதினால் (அதிசயத்தினால்) பேச முடியாதபடி நா உள்ளிழுக்கப்படுதல், தாகத்தால் நா வறளுதல்.

நாக்கு வாங்குதல்

=

நாவை உள்ளிழுத்தல், களைத்துப்போதல்,

களைக்கப் பண்ணுதல்.