உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

நாக்கு விழுதல் = நாக்குத் திமிர்வாதப்படுதல்.

நாக்கொட்டுதல் = நா வறளுதல்.

நாவசைத்தல் = பேசுதல்.

நாவடைத்துப்போதல் = பேசமுடியாமற் போதல்.

நாவுழற்றுதல் = பொறாமைப்பட்டுப் பேசுதல்.

X. பல் வினைகள்

பல்லுப்படுதல் = வசைமொழி அல்லது சாபம் பலித்தல்.

பல்லைக் கடித்துக்கொண்டு செ-தல்

=

வெறுப்புடன் செ-தல்.

கட்டாயத்திற்காக ஒன்றை

xi. மண்டை வினைகள்

மண்டை துள்ளுதல் = செருக்கு மிகுதல்.

மண்டை வறளுதல் மதிகெடுதல்.

xii. முக வினைகள்

= எண்ணெ- முழுக்கில்லாமல் தலையெரிதல்,

முகங்காட்டுதல் = காட்சி கொடுத்தல்.

=

முகங் காணுதல், முகங் கொள்ளுதல் கட்டி உடைவதற்குமுன் முனை வைத்தல்.

முகங் குறாவுதல் = துன்பத்தால் முகம் பொலிவிழத்தல்.

முகஞ் சின்னம்போதல் = வெட்கத்தால் முகங் கருகுதல்.

முகஞ்செ-தல் = நோக்குதல், தோன்றுதல், முன்னாதல்.

முகத்தி லருப்ப மிறங்குதல், முகத்தி லரும்புதல், முகத்திற் கரிக் கோடிடுதல் = மீசை முளைத்தல். முகந்தருதல் = பட்சங் காட்டுதல்.

முகந்திருத்துதல் = வாட்டந் தவிர்த்தல்.

முகம்புகுதல் = அருளுக்காக எதிர்சென்று நிற்றல்.

முகம் வழித்தல் = முகச்சவரம் செ-தல்.

முகமறுத்தல் = கண்ணோட்டமின்றிப் பேசுதல்.

முகமாதல் = உடன்படுதல்.

முகமுகம் பார்த்தல் = முகத்தை முகம் பார்த்தல்.