உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

முகமுறிதல் = கண்ணோட்டங் கெடுதல், வெறுப்படைதல்.

முகமொட்டுதல் = சேவல்களைச் சண்டைக்கு எதிர்முகமாக்குதல்.

xiii. வயிற்று வினைகள்

வயிற்றிலிட்டுக்கொள்ளுதல்

செ-தல்.

23

=

பெருந்துயரால் உடம்பு நலியச்

வயிற்றைத் திறத்தல் = கருக்கொள்ளுமாறு கடவுள் அருள்தல்.

வயிற்றைப் பெருக்குதல் = உண்ணும் அளவை அதிகப்படுத்துதல், நிரம்ப வுண்ணுதல்.

வயிறடைத்தல்

=

உண்ணும் விருப்பம் இல்லாதிருத்தல், மலடா

யிருத்தல், கருத்தரிக்கும் தன்மையற்றுப்போதல்.

வயிறு கடித்தல், வயிறு கிண்டுதல், வயிறு கிள்ளுதல் = பசிநோவு மிகுதல்.

வயிறு கழுவுதல் = அரும்பாடுபட்டு உணவுதேடிப் பிழைத்தல்.

வயிறு வா-த்தல் = மகப்பெறுதல்.

வயிறு வாழ்தல்

=

வேண்டிய உணவு உடையவனாதல், உயிர்

வாழ்தல்.

xiv. வா-வினைகள்

=

வாதிறத்தல் = புண்கட்டி உடைதல், பேசத்தொடங்குதல்.

-போக்குதல் = எளிதில் வாக்குக் கொடுத்தல்.

வாமடுத்தல் = உட்கொள்ளுதல்.

வாமலர்தல் = பேசுதல்.

வா-முட்டுப் போடுதல் = மறைபொருளை வெளியிடாதிருக்கு மாறு

கையூட்டுக் கொடுத்தல்.

வா-மூத்தல் = பேச்சிற் சிறத்தல், பேசமுந்துதல்.

வா-மூழ்த்தல் = வா-மூடுதல், பேசாதிருத்தல்.

T-மொழிதல் = அபிமந்திரித்தல்.

வா-வழங்குதல் = உண்ணுதல்.

வா-விடுதல் = ஒலித்தல்.