உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

வாயாலெடுத்தல் = கக்கல்

வாயாவி போக்குதல் = கொட்டாவி விடுதல், வீண்பேச்சுப் பேசுதல்.

வாயிலே போடுதல்

=

செ-தல்.

பேசவொட்டாது குறுக்கிட்டுப் பேசித் தடை

4. ஒருபொருட் பலசொற்கள்

ஒரே பொருள்பற்றிப் பல சொற்கள் வழங்கலாம்; அல்லது வழங்கு வதாகத் தோன்றலாம். அவையெல்லாம் பருப்பொருளில் ஒத்தனவே யன்றி, நுண்பொருளில் ஒத்தனவல்ல. அவற்றின் நுண்பொருளறிந்து அவ்வப் பொருளில் வழங்குதல் வேண்டும்.

எ-டு. கொசு என்பது, கட்டுக்கடை நீரிலும், இனிப்புப்பொருள்களிலும் மொ-த்துக் கொண்டிருந்து, மக்களைக் கடிக்காத ஒரு சிற்றீ வகை. ஒலுங்கு என்பது, சாக்கடையிலும் சதுப்பு நிலங்களிலுமிருப்பதா-, கொசுவினும் நீண்டு பருத்த தா-, மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு சிற்றீ வகை.

வாவல் (வௌவால்) என்பது, மரங்களில் தொங்கிக்கொண்டிருந்து கனி களையுண்டு வாழும் பெரு வௌவால். துரிஞ்சில் என்பது, சந்து பொந்துகளிற் புகுந்திருந்து, இரவில் ஊருக்குள் பறந்து திரிந்து, சிறு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் சிறு வௌவால்.

சொல்லுதலைக் குறிக்கப் பல சொற்கள் உள. அவற்றின் நுண் பொருள் வருமாறு:

சொல்லுதல் ஒருவனிடம் பொதுவாக ஒன்றைத் தெரிவித்தல். பேசுதல் - ஒரு மொழியைக் கையாளுதல்.

கூறுதல் - ஒன்றைக் கூறுபடுத்தி அல்லது வகைப்படுத்திச் சொல்லுதல். சாற்றுதல் - முக்கியமான செ-தியைப் பொதுமக்கட் கறிவித்தல். மொழிதல் - ஒவ்வொரு சொல்லையும் தெளிவா-ச் சொல்லுதல். என்னுதல் - ஒருவன் கூற்றைத் தெரிவித்தல்.

கிளத்தல் ஒரு பொருளைக் குறிப்பிட்டுச் சொல்லுதல்.

பன்னுதல் - பல பொருள்களுள் ஒவ்வொன்றையும் தனித்தனி குறித்துச் சொல்லுதல்.

நுவலுதல் - நூற்பொருளை நுணுக்கமாகச் சொல்லுதல்.