உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

உரைத்தல் - நூலுக்கு உரை கூறுதல் அல்லது ஒன்றை விளக்கிச் சொல்லுதல்.

நவிலுதல் - ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைப் பலகாலும் ஓதிப் பயிலுதல்.

பகர்தல் - ஒரு பொருளின் விலையைச் சொல்லுதல்.

நொடித்தல் கதை அல்லது வரலாறு சொல்லுதல்.

செப்புதல் - ஒரு வினாவிற்கு விடை சொல்லுதல். அறைதல் - ஒன்றை உரக்க அல்லது வலியுறச் சொல்லுதல். மாறுதல் உரையாட்டில் மாறி மாறிச் சொல்லுதல். விள்ளுதல் - ஒன்றை வெளிவிட்டுச் சொல்லுதல்.

விளம்புதல் ஒன்றைப் பலர்க்கு அறிவித்தல்.

புகலுதல் - ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.

இசைத்தல் ஒன்றைக் கோவைபட அல்லது ஒழுங்குபடச் சொல்லுதல்.

கழறுதல் கடிந்து சொல்லுதல்.

இயம்புதல் - இன்னிசையுடன் சொல்லுதல்.

25

கரைதல் – அழுதுகொண்டு அல்லது இரங்கிச் சொல்லுதல். இங்ஙனமே ஏனைச் சொற்களின் நுண்பொருளையும் அறிந்து கடைப்பிடிக்க.

5. இணைமொழிகள் (Words in Pairs)

அக்கம் பக்கம் பார்த்துப் பேசு; அக்குத் தொக்கு இல்லாதவன் (அகதி); அகடவிகடமா-ப் பேசுகிறான், அஞ்சிலே பிஞ்சிலே அறிய வேண்டும்; அடக்கவொடுக்கமா யிருக்கிறான், அடங்கியொடுங்கியிரு அபரடி படரடியா- (கடும்போரா-, பெருங் குழப்பமா-)க் கிடக்கிறது; அவன் இவனுக்கு அடி தண்டம் பிடிதண்டம் (முற்றிலும் அடிமைப்பட்டவன்); அடுகிடை படு கிடையா-க் கிடத்தல் (நினைத் ததைப் பெறுமளவும் ஒருவனது வீட்டின்முன் படுத்துக் கிடத்தல், பாயும் படுக்கையுமா-க் கிடத்தல்); அடிப்பும் அணைப்புமா யிருக்க வேண்டும்; அடுப்பும் துடுப்புமா- (சமைத்துக் கொண்டு) இருக்கிற நேரம்; அடையலும் விடியலும் குருடருக்கில்லை;