உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அண்ட பிண்டம் ஒத்த இயல்புடையன: அண்டை வீடு அடுத்த வீடு பகையாயிருக்கக் கூடாது; அண்டை யயலெல்லாம் தேடிப் பார்த்தேன்; அந்தியுஞ் சந்தியும் பூசை நடக்கிறது; அயர்த்தது மறந்ததை எடுத்துக் கொண்டு போ; அரதேசி (அகதேசி) பரதேசிகட்கு உணவளிக்க வேண்டும்; அரிசி தவசி விலையேறிவிட்டது; அருவுருவாகிய இறைவன்; அவனுடைய அருமை பெருமை தெரியவில்லை; வேலையை அரை குறையா-நிறுத்திவிட்டான்; அல்லுஞ் சில்லுமா- (சிறுசிறு தொகை யா-)ப் பணம் செலவாகிவிட்டது; அல்லும் பகலும் பாடுபடுகிறான்; அல்லை தொல்லையெல்லாம் தீரவேண்டும்; அலுங்கிக் குலுங்கிப் போயிற்று; அலுக்கிக் குலுக்கிக் கொண்டுவந்தான்; அலுத்துப் புலுத்து வந்திருக்கிறான்; அலைத்துக் குலைத்துக் கெடுத்துவிட்டான்; அழிந் தொழிந்து போயிற்று; அழுகையுங் கண்ணீருமா- வந்து சேர்ந்தான்; அழுங்கிப் புழுங்கி (பொறாமைமிக்கு)ச் சாகிறான்; அழுத்தந் திருத்த மா-ப் படித்திருக்கின்றான்; அள்ளாடித் தள்ளாடி நடக்கின்றான்; அழுது தொழுது வாங்கிவிட்டான்; அற்ற குற்றம் (கேடு பழுது) பார்க்க ஆளில்லை; அறமறம் அறிந்து ஒழுகவேண்டும்; அறுக்கப் பொறுக்கப் பாடுபட்டும் குடிக்கக் கஞ்சியில்லை; அடுத்து மடுத்துக் கேட்க வேண்டும்.

ஆக்கமுங்கேடும் அனைவர்க்கும் உண்டு; ஆக்கியரித்துப் போடுகிறவள் மனைவி; ஆட்டும் பாட்டுமாயிருக்கிறது அவன் வீடு; ஆடல்பாடல் கண்டுங் கேட்டும் களித்தான்; காதை ஆட்டி அலைத்து வருகிறாள்; தூணை ஆட்டியசைத்துப் பார்த்தேன்; ஆடிப்பாடிச் சென்றால் அவன் பரிசளிப்பான்; ஆடியசைந்து நடக்கின்றான்; ஆடையணி யலங்காரமும் வேண்டும்; ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத கிணறு; ஆண்டான் அடிமை என்ற வேறுபாடில்லை; ஆதாளிபாதாளியா- (ஆரவாரமா இருக்கிறது; ஆதியந்தம் இல்லாதவர் கடவுள். ஆ-ந் தோ-ந்து பார்த்து நட்புச் செ-யவேண்டும்; நேற்றிரவு கவுண்டருக்கு ஆயிற்றுப் போயிற்று என்று கிடந்தது; அவன் ஆயிற்றா போயிற்றா என்று அரட்டினான்; ஆலே பூலே என்று அலப்பிக்கொண்டிருக் கின்றான்; ஊர்முழுதும் ஆழும்பாழுமா- (அழிந்து)க் கிடக்கின்றது; ஆளும் தேளும் அற்ற இடம்; அவனை ஆற்றித்தேற்றி வை; ஆற அமர (பொறுமையா-)க் காரியஞ் செ-ய வேண்டும்; ஆனைக்கும் பூனைக்கும் உள்ள தூரம்.