உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

27

இசகு பிசகா நடக்கின்றான், அகப்பட்டுக் கொண்டான்; இண்டும் இடுக்கும் கைவிட்டுப் பார்த்தான்; இயங்குதிணை நிலைத்திணை (தாவர சங்கமம்) ஆகிய இருவகைச் சொத்தும் உண்டு; இயலும் செயலும் ஒத்திருக்கும்; இழுப்பும் பறிப்புமா-க் கிடக்கின்றது; இளைத்துக் களைத்துப் போனான்; இன்னார் இனியர் என்று அவனுக்கில்லை.

ஈகை யிரக்கம் (ஈவிரக்கம்) இருக்கவேண்டும்; ஈடும் எடுப்பும் (ஒப்பும் உயர்வும்) அற்றவன்; ஈடுசோடு இல்லாதவள்; ஈயெறும்பு மொ-க்கும்.

உடைநடையால் உயர்வு தாழ்வு அறியப்படும்; உண்டியுறையுள் வசதி இங்குண்டு; உண்டுடுத்து வாழவேண்டும்; உருட்டும் புரட்டும் என்னிடம் பலிக்காது; உருண்டு திரண்டு இருக்கும் உருளைக் கிழங்கு; உருவும் திருவும் ஒத்த காதலர்; உள்ளது உரியதெல்லாம் விற்று விட்டான்; உற்றார் உறவினர் உதவுவர்.

ஊண் உடை சிறக்க வேண்டும்; ஊண் உறக்கம் ஒழிந்து வேலை செ-தான்; ஊதியமும் இழப்பும் வணிகத்திற்கியல்பு.

எக்கசக்கமா - (ஏறமுடியாமல்) இருக்கிறது மரம்; எக்கச்சக்க மா- (தப்பமுடியாதபடி) மாட்டிக்கொண்டான்; எக்காளமும் ஏடாசியு மா - (பரிகாசமா)ப் பேசுகிறான்; எ-படை எறிபடை (அஸ்திர சஸ்திரம்) கொண்டு பொருதார்கள்.

ஏங்கித் தேங்கித் தவிக்கிறான்; ஏட்டிக்குப் போட்டியா-ச் செ-கிறான்; ஏடாகோடம் (ஏறுமாறு) பண்ணுகிறான்; ஏமமும் சாமமும் கூத்தாடுகின்றனர்; ஏழை பாழை பிழைக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வு சமுதாயத்தில் இருக்கக்கூடாது; ஏற்றத் தாழ்ச்சியாயிருக்கிறது விட்டம்; ஏறஇறங்கப் பார்க்கின்றான்.

ஒட்டி யுலர்ந்து போயிற்று வயிறு; ஒட்டு உறவு அற்றுப் போ- விட்டது; ஒண்டிசண்டியா-க் காட்டுவழி போகக் கூடாது; ஒன்றா - மன்றா-க் (வேறுபாடின்றிக் கலந்து) குடியிருக்கிறார்கள்.

ஓட்டமும் நடையுமா-ப் போ-ச் சேர்ந்தோம்; ஓட்டை உடைசல் போட்டுவைக்கும் அறை; ஓட்டை சாட்டை யிருந்தால் கொடு; ஓடியாடித் திரிகிறான்; ஓ -வு சா-வு ஒருநாளும் எனக்கில்லை.