உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

செல்லவில்லை;

கட்டிய முட்டியுமா-

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சரக்குக் கங்குகரையற்று கிடக்கின்றது; கஞ்சிதண்ணீர் அவனுக்குச் உழுது போட்டிருக்கின்றான்; எதற்கும் ஒரு கட்டுமட்டு (அளவு) வேண்டும்; கடாவிடைகளால் பொருளை விளக்கினார்; கண்டது கடியதெல்லாம் சொல்லக்கூடாது; கண்டவன் கடியவனெல்லாம் வந்து சாப்பிட்டான்; கணக்கு வழக் கில்லாமல் கொண்டுபோனான்; கண்டதுண்டமா- நறுக்கிவிடுவேன்; கண்ணீருங் கம்பலையுமா-க் காலங்கழிக்கிறோம்; கண்ணும் கருத்து மா-ப் பேண வேண்டும்; கத்திக்கதறிச் சொன்னேன்; கந்தல் கூளமா- (கந்தரகோலமா-)க் கிடக்கின்றது; கப்புங்கவருமா-க் கிளைத்திருக் கின்றது; கந்தலும் பொத்தலும் உடுத்திக்கொண்டு திரிகின்றான்; கரடு முரடான துணி; கரை துறை தெரியவில்லை; கல்லுங் கரடுமான வழி; கல்லுங் கரம்புமா-க் கிடக்கின்ற நிலம்; கல்வி கேள்விகளிற் சிறந்தவன்; கலியாணங் காட்சிக்குப் போக மாட்டான்; கைகால்கள் கழுக்கு மொழுக் கென்று (பருத்துக் கொழ கொழத்து) இருக்கின்றன; களங்க மளங்க மற்றுப் பேச வேண்டும்; கள்ளங்கவடில்லாதவன்; கற்பும் பொற்பும் உடையவள்; கற்றோர்க்கும் மற்றோர்க்கும் விளங்கும் நடை; கன்று கயந்தலை (பிள்ளைகுட்டி); கன்றுகாலி வரும் நேரம்; கனவோ நனவோ?

காக்கனும் போக்கனும் (அயலானும் வழிப்போக்கனும்) கொள்ளை கொண்டு போனார்கள்; பிள்ளைகள் காச்சுப்பூச்சென்று (காச்சுமூச் சென்று) கத்திக்கொண்டிருக்கிறார்கள்; எங்குப் பார்த்தாலும் காடுஞ் செடியுமா- இருக்கின்றது. ருக்கின்றது. காடுமேடா- அலைந்து திரிகின்றான்; காதிலே கழுத்திலே ஒன்றுமில்லை; காமா சோமா (கன்னாபின்னா) என்று கத்திக்கொண்டிருக்கின்றான்; பயிர்கள் கா-ந்து கருகிவிட்டன; காரசாரமற்ற (மதிகேடான பிள்ளைகள்; கானான் கோனான் என்று நாதாங்கிக் கடுக்கன் தொங்குகின்றது.

கிட்டத்தட்ட (ஏறக்குறை); கிட்டமுட்ட அவனை வரவிடாதே; கிண்டிக் கிளறி (கிண்டிக் கிளைத்து) வைத்துவிட்டது; கிணறு குட்டை யிருந்தால் குளிக்கலாம்; கிழங்கெட்டை (கிழடுகெட்டை) வீட்டி லிருப்பது நல்லது.

ஆடு கீரைகுழை தின்னு; கீரியும் பாம்பும் போலப் பகை.

குஞ்சுங் குழுவானுமா- இருக்கிறது அவன் குடும்பம்; குட்டி குறுமான் எல்லாம் வந்துவிட்டன; குண்டக்கமண்டக்கமா- அவனைக் கட்டித் தூக்கிக்கொண்டு போனார்கள்; தரை குண்டுங் குழியுமா