உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

29

இருக்கின்றது; குணங்குற்றம் யாருக்கு முண்டு; குணங் குறிகளைக் கண்டு பிடிக்க வேண்டும்; காதில் குத்தலுங் குடைச்சலுமா- இருக் கின்றது; அரிசியைக் குத்திக்கொழித்து ஆக்கவேண்டும்; வீடுவாசல் குப்பை கூளமா-க் கிடக்கிறது; கும்பக்குழிய அளந்தான்; கும்பிக் கொதித்து நிற்கின்றாள் மனைவி; கும்பிட்டுக் கூத்தாடி வாங்கினான்; குலங்கோத்திரம் பார்த்துப் பெண்கொள்வர், குலமுங்குணமும் ஒத்த காதலர்; குழந்தை குட்டி பெருத்தவன்; குளங் குட்டையில் தண்ணீ ரில்லை; குற்றங் குறைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ள வேண்டும்; குற்றநற்றம் பார்க்கக்கூடாது; குறுக்கும் நெடுக்கும் சரிகைக்கரை இருக்கின்றது; குறுக்கும் மறுக்கும் திரிகிறான்.

கூட்டநாட்டம் இப்போது நடக்கிறதில்லை; கூட்டிக் குமித்து வைத்தான்; கூட்டிக் குறைத்துப் பேசுவான்; கூடக் குறைய இருந்தால் சொல்; கூடமாட வேலை செ-; கூடிக் குலாவித் திரிகின்றனர்.

கெஞ்சிக்கெதறிக் கேட்டான்.

கேட்பார் கேள்வியில்லை; கேட்பாரும் மே-ப்பாருமற்றுத் திரிகின்றான்; கேள்விமுறை இல்லை; "கேளுங் கிளையும் கெட்டார்க் கில்லை."

கையுங் களவுமா-ப் பிடிக்கப்பட்டான்; கையுங்காலும் வைத்துக் கொண்டு சும்மாயிருக்கமாட்டேன் என்கிறான்; கையுங் காலுமா- (ஒன்று மில்லாத வறியவனா-) வந்து சேர்ந்தான்; கையுமெ-யுமா-க் கண்டுபிடிக்கப்

பட்டான்.

கொக்கு குருவி எல்லாம் போ-விட்டன; கொஞ்சிக் குலாவிப் பேசுகின்றனர்; கொஞ்சநஞ்சமாவது மீத்துவைக்க வேண்டும்; கொட்டு குழல் இல்லாமல் சடங்கு நடந்தது; கொடிவழியில் கலியாணஞ் செ-வர்; கொடுக்கல் வாங்கல் (கொடை வாங்கல்) நிரம்ப இருக்கின்றது; கொண்டான் கொடுத்தான் இடத்திலே நெடுநாள் தங்கக்கூடாது; கொண்டு கொடுத்து வாழவேண்டும்; வறியவர் கொத்தடிமை குல வடிமையா- வாழ நேர்ந்தது; காயைக் கொத்திக் குதறி வைத்திருக் கின்றான்; கொத்தோடே குலை யோடே கொண்டு போனான்; மரம் கொப்புங் குழையுமா-த் தழைத்திருக் கின்றது; கொள்வனை கொடுப் பனை அவர்களிடையில்லை.