உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கோட்டை கொத்தளமெல்லாம் காவல் செ-யப்பட்டன; தெருக்கள் கோணல்மாணலாயிருக்கின்றன; கோயில் குளம் கடவுளை நம்பாதவனுக் கில்லை; கோலுங் கொடுக்குமா-க் கட்டிக்கொண்டு திரிகின்றான்; கோள்குண்டுணி சொல்கிறவனை நம்பக்கூடாது.

சட்டதிட்டங்கட்கு உட்பட்டு நடக்கவேண்டும்; சண்டு சருகு அரிக்கின்றாள்; சண்டை சச்சரவு இருக்கக்கூடாது; சண்டை சல்லியத் திற்கு (சண்டை சாடிக்கு)ப் போகமாட்டான்; சந்தி சதுக்கங்களிற் சிலை நிறுத்தப்பெறும்; சந்து பொந்தெல்லாம் தேடிப்பார்த்தான்; சப்புஞ் சவரும் வாங்கிக்கொண்டு வந்திருக்கின்றான்; தோல் சவண்டு துவண்டு கிடக்கின்றது; மா(மாவு) சளித்துப் புளித்துப் போயிற்று; சழிவு நெளிவு இல்லாத பெட்டியா-வாங்கு.

சாக்குப்போக்குச் சொல்லக்கூடாது; அவன் சாகப்பிழைக்கக் கிடந்தான்; அவன் குற்றஞ் செ-தாலும் சாடை மாடையா- விட்டுவிடு; சுவர் சா-த்து சரிந்து கிடக்கின்றது. வேலையைச் சாயலா - மாயலா - (சாலாமாலா)ச் செ-து வைத்திருக்கின்றான்; அவனைச் சாவிழவு தள்ளி வைத்திருக்கின்றது.

சிக்கடி முக்கடியா-க் கிடக்கிறது நூல்; உடம்பெல்லாம் சிக்குஞ் சிரங்குமா- இருக்கின்றது; சிட்டிசிரட்டை யெல்லாம் தண்ணீர் ஊற்றிவைத் திருக்கின்றது; சோற்றைச் சிந்திச்சிதறிச் சீரழிக்கின்றான்; சிந்துமணி சிதறுமணி யெல்லாம் பொறுக்கிக்கொண்டாள்; சிறுதனம் சீராட்டு (சீதனம் சீராட்டு) அவளுக்கு நிரம்பக் கிடைத்தது; சின்னது சிறியதிற்கு ஒன்றுங் காட்டக் கூடாது; வண்டி சின்னபின்னமா-ச் சிதைந்து கிடக்கின்றது.

சீட்டுநாட்டுப் போட்டு வைத்திருக்க வேண்டும்; சீத்துப் பூத் தென்று சீறினது பாம்பு; அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள்: சீரியர் பூரியர் (மேலோர் கீழோர்); சீருஞ் சிறப்புமா- வாழ்ந்திருந் தான்; சீருஞ் செட்டுமா-ப் பிழைக்க வேண்டும்; சீவிச்சிக் கெடுத்துச் சடை பின்னினாள்; சீவிச் சிங்காரித்து வருகின்றாள்; சீறிச் சினந்து விழுந்தான்.

சுள்ளி சுப்பல் பொறுக்கி எரிக்கின்றாள்; படுக்கையைச் சுற்றிச் சுருட்டிக் கொண்டுபோ-விட்டான்; சுற்று முற்றும் பார்த்தான்.