உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

31

செடிகொடி போட்டால் கா- -க்கும்; செடிசெத்தை யெல்லாம் அகற்றவேண்டும்.

சொத்து சுகம் அவனுக்கு ஒன்றுமில்லை; சொள்ளை சொட்டை ஏதாவது சொல்லுவான்.

தட்டாமல் தடுக்காமல் (தட்டாமல் முட்டாமல்) தாராளமா - வாசல்வழி கொண்டுபோக முடியுமா? மட்கலங்களைத் தட்டிக்கொட்டி வாங்கவேண்டும்; தட்டுத்தடங்கலின்றிப் பேசினான்; தட்டுத்தடுமாறி விழுந்தான்; தட்டுத்தடையின்றிப் பேசுகிறான்; தட்டுமுட்டு வாங்க வேண்டும்; தடுத்து மடுத்துச் சொல்ல ஆளில்லை; தடை விடை (ஆட்சேப சமாதானம்) நிகழ்ந்தன; தண்ணீர் வெந்நீர் கொடுக்க ஆள்வேண்டும்; தத்தித் தொத்திச் சுவரில் ஏறினான்; தப்பித்தவறி இந்தப் பக்கம் வராதே; தப்புந் தவறுமா-ப் பேசுகிறான்; தடங்கல் மடங்கலின்றிச் செல்லலாம்.

தாங்கித் தடுக்கி அவளைக் கூட்டிக்கொண்டு வந்தான்; தா- பிள்ளை (உறவினர்) ஒருவரும் வரவில்லை; தாயும் சேயும் நலம்.

திண்டு தலையணை போட்டுப் படுத்துக் கொண்டான்; திண்டு முண்டு (தில்லுமுல்லு) பண்ணுகின்றான்; கொம்பு திருகல்முறுகலா- - இருக்கின்றது.

துட்டுத்துக்காணி

கையிலிருக்க வேண்டும்; மரம் துண்டு துணுக்காக இருக்கின்றது; மேசையினின்று விழுந்த துண்டு துணக்கை களை நா- தின்றது; போர்க்களத்தில் துண்டுந் துணியுமாக உடல் கள் கிடந்தன; துணிமணிகளைப் போற்றி வைக்கவேண்டும்; பையன் சுடுமணலில் துள்ளித் துடித்துவிட்டான்.

தூசிதுப்பட்டை (தூசி துரும்பு): நெற்களத்தைத் தூர்த்துத் துடைத்து

விட்டார்கள்.

தேக்கித் தெவிட்டிப் போனார்கள் விருந்தினரெல்லாம்; ஆட்டைத் தேடியோடிப் பிடிக்கவேண்டும்; தேர் திருவிழாவிற்கு ஏராளமான பேர் வருவார்கள்; சந்தனக்கட்டை தே-ந்து மதுபோ-விட்டது.

தொக்குத்தும் வகுத்தும் சொல்லவேண்டும்; தொடுத்துமடுத்துச்

செ-துமுடிக்க வேண்டும்.