உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தோட்டந்துரவு ஏராளமாக அவனுக்குண்டு; தோலும் எலும்பு மா-ப் போனான்.

நகைநட்டு அணிந்திருந்தால் மதிப்பார்கள்; நங்கை நாத்தூணாள் குறைசொல்லாதபடி நடந்துகொள்ள வேண்டும்; நச்சும் பிச்சும் எனக்கு வேண்டா; நயபயத்தால் ஆளவேண்டும்; நரைதிரை வருமுன்னமே நல்வினை செ-ய வேண்டும்; நல்லது பொல்லது நடந்தால் நாலு பேர்க்குச் சாப்பாடு கிடைக்கும்; நலம் பொலம் இரண்டும் அனுபவிக்க வேண்டும்; நலிந்தும் வலிந்தும் பொருள்கொள்ளக் கூடாது; நன்னியுங் குன்னியும் (நன்னி குன்னி) நிறைய வந்திருந்தன.

நாட்டிலும் காட்டிலும் மக்கள் வாழ்கின்றனர்; நாடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்; நாடு நகரெல்லாம் இதே பேச்சு; நாணிக் கோணி நடக்கின்றாள்; நாயும் பேயும் போன்ற தீயமக்கள்; நாளுங் கிழமையும் பார்த்துச் செ-தாலும் வருவது வந்தே தீரும்; நாளுங் கோளும் நம்மை என்ன செ-யும்?

நிரந்து கலந்து பேசி முடிவு செ-யுங்கள்; நிலபுலம் அவனுக்கு நிரம்பவுண்டு; நீட்டி நிமிர்ந்து சா-ந்துகொண்டான்.

நீக்குப்போக்கு (இடைவெளி, ஓ-வு ஒழிவு;) இல்லை.

நெட்டை கட்டை (கூடுதல் குறைதல்) இருந்தாலும் சரியென்று போகவேண்டும்.

நேருங் கூருமா- (நெட்டையும் குட்டையுமா-)க் காயை அறுத்துப் போட்டிருக்கின்றது.

நைந்து பி-ந்து போ-விட்டது துணி; இஞ்சியை நைய நறுங்கத் தட்டிப் போடு.

நொண்டி சண்டிக்கு (நொண்டி நுடத்திற்கு) உதவவேண்டும்.

நோ- நொம்பலம் (நோவு நொடி) வந்தால் கவனிக்க ஆளில்லை.

பங்கு பாகம் கேட்கின்றான்; பட்டது கெட்டதெல்லாம் சொன் னான்: பட்டம் பதவிகட்கு ஆசைப்படுகின்றான்; பட்டிதொட்டி யெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும்; பட்டினியும் பசியுமா-க் கிடந்து வருந்துகின்றான்; பட்டுப் பழகித் தெரியவேண்டும்; பம்பை பறட்டை யா-த் தலையை வைத்துக் கொண்டிருக்கின்றனர்; பம்மிப் பதுங்கித்