உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

33

திரிகின்றான்; பயறு பச்சை நன்றா- விளைந்திருக்கின்றன; பயிர் பச்சை நன்றா- விளையவில்லை; மக்களினம் பல்கிப் பெருகி வருகின்றது; பழக்க வழக்கம் நன்றாயிருக்க வேண்டும்; பழி பாவங் கட்கு அஞ்ச வேண்டும்; கொடி பற்றிப் படர்ந்து செல்கின்றது.

பாங்கு பரிசனை (நன்னடை)யறிந்து ஒழுகவேண்டும்; எந்நேர மும் பாட்டும் படிப்பும்தான்; பாயும் படுக்கையுமா-க் கிடக்கின்றான்; பாலும் தேனும் ஓடும் தேசம்; பாலும் பழமும் உண்டு வளர்ந்தவன்.

பி-த்துப் பிடுங்கிவிடுவார்கள்; பிள்ளைகுட்டி யில்லாதவன்; பிறப்பு வளர்ப்பு வெவ்வேறு ஊர்; செடியுங் கொடியும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

புல் பூண்டு மழைக்காலத்தில் முளைக்கும்.

பூச்சி பொட்டை (பூச்சிபொட்டு) வழியிலிருந்தாலும் இருக்கும்; பூவும் பிஞ்சுமாயிருக்கிறது பீர்க்கு.

பெண்டு

பிள்ளைகட்குத் தேடிவைக்க வேண்டும்; பெற்றது

பிறந்தது பிற்காலத்தில் உதவும்.

பேரும் புகழும் நாடெங்கும் பரவியுள்ளது.

பொக்கும் பொடியும் காற்றில் பறந்துவிடும்; பொங்கிப் பொரித்துப் போடுவது யார்? பொட்டுப் பொடியெல்லாம் நீக்கிவிட வேண்டும்; சோலை முழுதும் பொந்தும் புதருமா- இருக்கின்றது; பொ-யும் புலையும் (பொ-யும் புளுகும்) சொல்லித் திரிகின்றான்.

போக்கிரி சாக்கிரியுடன் சேரக்கூடாது; அவனுக்குப் போக்கு புகல் ஒன்றுமில்லை; அவரைப் போற்றிப் புகழ்ந்து பேசினார்கள்.

மக்கி (மங்கி) மழுங்கிப்போன கத்தி; மட்டு மதிப்பு இருக்க வேண்டும்; மண் மனை யெல்லாம் விற்றுவிட்டான்; வீடு மண்ணும் மதிலுமா-க் கிடக்கின்றது; மந்திர தந்திரம் வல்லவன்; மயங்கித் தியங்கி நிற்கின்றான்; மயக்கமும் தியக்கமுமா-க் கிடக்கின்றான்; மரமட்டை யிருந்தால் எரிக்கலாம்; மருந்து மாயம் தெரிந்தவன்; மலைக்கும் மடுவுக்கு முள்ள தூரம்; மழை தண்ணீர் அங்கு உண்டா? இங்கு மழையுந் தண்ணீருமா- இருக்கின்றது.