உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

மாசுமறு அற்றவன்; மாடு கன்று வைத்திருக்கின்றான்; ஈனம் சிறிதும் அவனுக்கில்லை.

மிச்சம் மிகுதியைச் சேர்த்துவை; மினுக்கித் தளுக்கித் திரிகின்றாள்.

முக்கலும் முனங்கலும் எதற்கு? முக்கித் தக்கி மூட்டையைத் தூக்கிவிட்டான்; யானை முட்டி மோதிக் கதவை முறித்துவிட்டது; விறகு முண்டும் முடிச்சுமா-க் கிடக்கின்றது; குழந்தையை முத்தி மோந்து அணைத்துக்கொண்டாள்; நிலத்தில் முள்ளுங் குருக்கும் முளைத்து விட்டது; காடெங்கும் முள்ளும் முடையுமா-க் கிடக் கின்றது; முற்ற முடிய இருந்து சொற்பொழிவைக் கேட்க வேண்டும்.

மூச்சுப் பேச்சு இல்லை; மூலை முடங்கியிற் போ- உறங்கு கின்றான்; மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தேன்; ஆயுதங்க ளெல்லாம் மூழியுங் காளியுமா-க் கிடக்கின்றன.

வகைதொகையா-ப் பேசவேண்டும்; வந்தது போனதைப் பூச வேண்டும்; வந்தனை வழிபாடு நடந்துவருகின்றது; வம்பு தும்பு வேண்டா; வழிதுறை தெரியவில்லை; வழிவகை சொல்லிக்கொடு; குளம் வற்றி வறண்டு போ-விட்டது.

வாட்டஞ்சாட்டமாயிருக்கிறான் பையன்; அங்கணம் வாட்டஞ் சாட்டமா யிருக்கவேண்டும்; கதிரை வாட்டி வதக்கித் தின்றார்கள்; வலியவர் எளியவரை வாட்டி வதைத்து வருகின்றனர்; மலர் வாடி வதங்கிப்போ-விட்டது; அவன் நிலத்திற்கு வா-க்கால் வரப்பு இல்லை; வருவது வா-க்கும் கைக்கும் எட்டவில்லை; வா-க்குங் கைக்குமா யிருக்கிற நேரம்; வாரி வகிர்ந்து உச்சியெடுக்க வேண்டும்; வாழ்விலும் தாழ்விலும் கணவன் மனைவியர் பிரிதல் கூடாது; வானகமும் வையகமும் அதற்கு ஈடல்ல.

ட்டகுறை தொட்டகுறை முடிக்கவேண்டும்; விடேன் தொடேன் என்று தொடர்ந்தான்; விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள தூரம்; விதி விலக்கு அறிந்து ஒழுகவேண்டும்; விருந்து வேற்று வந்தால் வேளாண்மை செ-யவேண்டும்; விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு பொருளை ஆராய வேண்டும்; வீடுங் குடித்தனமுமா- அவனை இருத்தி வைத்தார்கள்; வீடும் விளக்குமா- இருப்பது நல்லது; வீரசூரமா-ப் பேசினான்.