உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

35

வெட்கி விறைத்துப் போனான்; வெட்டுங் குத்துமா-க் கிடக் கின்றது; வெட்டுப்பழி குத்துப்பழி நேர்ந்துவிடும்; சோறு வெந்து விரிந்துவிட்டது; வெள்ளையுஞ் சொள்ளையுமா-ப் போகவேண்டும்.

வேரும் தூரும் கறையான் அரித்துவிட்டது; வேர்த்துப் பூத்து (வேர்த்து விருவிருத்து) ஓடிவந்தான்; வேலைவெட்டியில்லாதவன்.

6. மரபுத் தொடர்மொழிகள் (Idiomatic Phrases and Expressions)

அகத்து மகிழ்ச்சி முகத்து நிகழ்ச்சியாக, அகப்பற்று புறப்பற்றுகளை அறவே ஒழித்து, அடக்குவாரற்ற கழுக்காணியா-, அடிதண்டம் பிடிதண்டமா- அடிமைப்பட்டு, அடிதலை தடுமாறி, அடிமுதல் முடிவரை, அடிமைமுதல் அரசன்வரை, அடியற்ற மரம்போல் படி மேல் விழுந்து, அடுப்பங்கரையில் ஆம்பி பூப்ப, அண்டபிண்ட அனைத்துப் பொருள்களும் (அனைத்துயிர்களும்), அமிழ்தினுமினிய தமிழ்(மொழி), அரிதுணர் பொருளவற்றை எளிதுணர் பொருளவாக்கி, அரைக் காசிற்கும் வழியில்லாமல், அழுதபிள்ளையும் வா-மூடும் அதிகாரம், அன்புள்ள அரசனும் அறிவுள்ள அமைச்சனும், அறமுதல் நான்கும் திறமுற ஆற்றி.

ஆக்கவழிப்பாற்றல் (சாபானுக்கிர சக்தி) அடைந்து, ஆக்கவும் அழிக்கவும் வல்லவரா-, ஆசைகாட்டி மோசஞ் செ-து, ஆகாயத் தாமரையும் ஆமைமயிர்க் கம்பலமும், ஆடையணியலங்காரனா-; 'ஆடையின்றி வாடையின் வாடையின் மெலிந்து மெலிந்து கையதுகொண்டு மெ-யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇ" ஆண்டிமுதல் அரசன் வரை, ஆண்டில் இளையனா- அறிவில் முதியனா-, ஆருமற்ற அத்தவனக் காடு, ஆலமுண்ட நீலகண்டன், ஆளுக்கேற்ற வேடமுங் காலத்திற் கேற்ற கோலமும், ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் வைத்து.

இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்க, இடம் பொருள் ஏவல், இட்டது சட்டம் வைத்தது வரிசை, இந்திரன் முதலிய இறையவர் பதமும் அந்தமிலின்பத் தழிவில் வீடும், இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பதா-, இம்மை மறுமை நற்கதிகள் (வீடு), இயன்றவரை முயன்று, இருகையினுமேந்தித் தலையில் தாங்கிக் கண்ணிலொற்றி, கண்ணிலொற்றி, இருதோணியிற் கால்வைத்து, இருபகட் டொருசகடு, இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமா-,