உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இருவினையொப்பு மலபரிபாகம், இலவுகாத்த கிளிபோல் ஏமாறி, இலை மறை கா-போல் மறைந்து கிடந்த, இலக்கண விலக்கியம் விளக்கமா-க் கற்று, இறைவனுக்கே வெளிச்சம், இறுதிவரினும் உறுதிகூறி, இன்னோரன்ன.

ஈர்ங்கை விதிராத இவறி (உலோபி)

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர், உடல்கரண வுலகவின்பங்கள் (தனுகரண புவன போகம்), உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புவித்து, உண்ட வீட்டிற்கு இரண்டகம் செ-யாமல், உப்பிட்டவரை உள்ளளவும் நினைந்து, உப்புக்கும் உழையாமல் ஊர்சுற்றித் திரிந்து, உயிர் ஒடுங்கி உடல் நடுங்கி, உயிருக்குயிரா-, உரப்பியுங் கனைத்தும் எடுத்தும் ஒலிக்கின்ற (வடமொழி யெழுத்துகள்), உருவுந்திருவுங் குலமுங் குணமும் ஒத்தவரா, உலகவழக்கு செ-யுள்வழக்கிற் கொப்ப, உலக மெல்லாம் ஒருகுடைக்கீழ் ஆண்டு, உவர்க்கடலன்ன செல்வர், உள்ளங் கால் வெள்ளெலும்பு தோன்ற, உள்ளங்கை நெல்லிக்கனிபோல், உள்ள தைக் கொண்டு நல்லதைப் பண்ணி, உள்ளும் புறம்பும் ஒத்து, உள் ளொன்று புறம்பொன்று பேசாமல், உற்றுநோக்கி ஊகித்தறிந்து, உற் றோர் மகிழ மற்றோர் புகழ, உள்மதம் இல்மதம் (ஆஸ்திகம் நாஸ்திகம்).

ஊணுறக்கமொழிந்து, ஊரார் உடைமைக்குப் பேராசைகொண்டு, ஊரார் உடைமைக்குப் பேயா-த் திரிந்து, ஊரார் பகைக்கும் தீராப் பழிக்கும் ஆளா-, ஊருக்குழைத்து ஊதாரியா-ப் பிழைத்து.

எங்கெழிலென் ஞாயிறெமக்கு என்றிருந்து, எச்சிற்கையாற் காக்கை விரட்டாதவன், எட்டாத பழத்திற்குக் கொட்டாவிவிட்டு, எடுத்த காரியம் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டு, எடுப்பார் கைப்பிள்ளையா-, எட்டிரண்டும் அறியாத, எண்சாணுடம்பு ஒரு சாணாகக் குன்றி, எண்ணத்தொலையாது ஏட்டிலடங்காது, எண்ணுக் கும் எட்டா இறைவன், எந்நாட்டினு மினிய தென்னாட்டில், எல்லார்க் கும் நல்லவனா, எல்லாம்வல்ல இறைவன், எழுமையும் வழுவாத உழுவலன்பு, என்றித் தொடக்கத்தார்.

ஏராளமாயும் தாராளமாயும், ஏழாம் நரகிற்கும் கீழாம் நரகம், ஏழை பாழைகளை வயிற்றிலடித்து வாயில் மண்ணைப்போட்டு, ஏனோ தானோ என்றிராமல்.