உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

ஐயந்திரிபறக் கற்று

37

ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடுமா-, ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணிற் சுண்ணாம்பும் தடவாமல், ஒரு பக்கம் பாலும் ஒருபக்கம் நீரும் ஒழுக, ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர், ஒன்றுக்கும் பற்றாத நாயேன்.

பருகி.

ஓடும் பொன்னும் ஒப்ப நினைக்கும், ஓல்உடன் ஆடிப் பால் உடன்

கடன்மடை திறந்தாற்போலக் கவிபாட வல்லவரா-, கட்டி யணைத்து உச்சிமோந்து, கடைந்தெடுத்த கழிபெருமடையன், கடன் வாங்கி உடன் வாங்கி உடலைத்தேற்றி, கண்கண்ட தெ-வம், கண்கவர் கவின்பெறு கட்டடம், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், கண்ணாற் கண்டதைக் கையாற் செ-து, கண்ணீர்வார மெ-ம்மயிர் சிலிர்ப்ப, கண்ணீர்விட்டுக் கதறியழுது, கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக்குயிராகவு மிருந்து, கண்ணைக் கவர்ந்து பார்வையைப் பறித்து உள்ளத்தைக் கொள்ளை கொண்டது, கண்மணி போற் காத்து, கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப்போக, கண்மூடித் தனமா-க் காலங்கழித்து, கதிரவனுந் திங்களு முள்ள காலமெல்லாம், கயல்விழியுங் குயில் மொழியும், கரி பரி தேர் கால் முதலியன (ரத கஜ துரக பதாதி), கருவிலே திருவுடையார், கல்வியறி வொழுக்கங்களிற் சிறந்து, கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்கு விளங்காமல்.

காடிடையிட்டும் நாடிடையிட்டும், காடுவாவாவென வீடு போ போ வென, காமவெகுளி மயக்கங்கள், காரியத்திற் கண்ணுங் கருத்து மாயிருந்து, காலாலிட்டதைக் கையாற் செ-து, காலாலிட்டதைத் தலைமேற் கொண்டு, காற்றினுங் கடுகிச் சென்று, காலனும் அஞ்சும் கடுங்கண் மறவர்.

குடிக்கக் கூழுக்கும் கட்டக் கந்தைக்கும் வழியற்று, குண்டுங் குழியுங் திண்டுந் திருசும், குமரிமுதல் இமயம் வரை, குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர், குற்றத்தைத் தள்ளிக் குணத்தைக் கொண்டு, குறுகுறு நடந்து குதலை மொழிந்து.

கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும், கூற்றினும் கொடியவர், கூற்றத்தைக் கையால் விளிக்கும் கொடுமறவர்.