உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

கெட்டுக் கீழை வழியாகி.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கைகட்டி வா புதைத்து, கைக்கெட்டினது வா-க்கெட்டாமல், கைம்மாறு கருதாமல்.

நீக்கி

கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டன், கொடியாரை அடியாரைக் காத்தல், கொடுப்பாரும் அடுப்பாருமின்றி, கொண்டை மேற் காற்றடிக்க (கவலையின்றி), கொல்லத்தெருவில் ஊசி விற்கிறவன்.

கோடாகோடிச் சூரிய வொளியுள்ள, கோடியுந் தேடிக் கொடி மரமும் நட்டி.

சட்டங்கள் கற்றும் பட்டங்கள் பெற்றும், சதுர வேதனைப்பட்டுச் சம்பாதித்து, சந்தன களப காசறை (கஸ்தூரி), சம்பளமும் உம்பளமும் பெற்று.

சாதுரியமாயும் மாதுரியமாயும் பேசி.

சிந்தையுமொழியுஞ் செல்லாநிலைமைத்தா கலின், சிறுகக்கட்டிப் பெருக வாழ்ந்து, சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினர்.

சுவையொளி யூறோசை நாற்றம். செ-வன செ-து தவிர்வன தவிர்ந்து

சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும், சொற்சுவை பொருட் சுவைகளிற் சிறந்து, சொன்மதியும் தன் மதியும் (சொற்புத்தியும் சுய புத்தியும்) இல்லாமல், சொன்னயமும் பொருணயமும், சொன்னோக்கும் பொருணோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும்.

சோற்றுக்குச் செலவும் பாருக்குப் பாரமுமா-.

தட்டுக்கெட்டுத் தடுமாறி, தட்டுத் தடையின்றித் தாராளமா-ப் பேசவல்ல, தட்பவெப்ப நிலை (சீதோ ணஸ்திதி), தமிழ்நாடு செ-த தவப் பயனாகத் தோன்றி, தலையால் வந்ததைக் காலால் தள்ளி, தலையுங் காலுந் தெரியாது தம்முள் மயங்கி, தவிடுபொடியா-த் தகர்த்தெறிந்து, தவித்த முயலை அடிப்பவன், தளர்நடை நடந்து மழலை மொழிந்து, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், தன்னுயிர் போல் மன்னுயிரெண்ணுந் தண்ணளியான்.

தான்றோன்றித் தம்பிரான். திறம்படவும் தேம்படவும் பேசி.