உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

39

துணைக்குத் துணையா-த் தொண்டைக்குழிக்கு வினையா-, துரும்பைத் தூணாக்கிப் பேனைப் பெருமாளாக்கி, துள்ளித் திரிகின்ற காலத்தில் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வையாமல்.

தெற்கு வடக்குத் தெரியாதவன், தென்றல் வீசித் தேன் சொரிந்து வண்டு பாடும் வளமரக்கா.

தேனினுமினிய தீஞ்சொல், தேனினுமினிய தென்மொழி.

தொகுத்தும் வகுத்தும் விரித்தும் (தொகை வகை விரியா-), தொடக்கம் நடுவிறுதி, தொல்காப்பியத்தும் தொல்காப்பியத்தும் பல்காற் பயின்று, தொல்காப்பியத்தைப் பல்காற் பயின்று.

தோன்றாத் துணையாயிருந்து.

நடையுடை பாவனை, நரை திரை மூப்பு, நல்லதைக் கொண்டு அல்லதைத் தள்ளி, நம்பா மதம் (நாஸ்திகம்) பேசி நாத்தழும்பேறி.

நாட்டுக்கு நாற்காதம், நாடவைத்துக் கெடுசெ-து, நாடியைப் பிடித்து நல்ல சொற் சொல்லி, நாத்தளர்ந்து வா- குழறி, நாநயமும், நாணயமும், நாயொன்று சொல்லப் பேயொன்று சொல்ல, நால்வேதம் ஆறு சாத்திரம் பதினெண் புராணம் அறுபத்துநான்கு கலைஞானம், நாளைக்கொரு திறமும் வேளைக்கொரு நிறமும், நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமும்.

நின்று நெளித்து நீட்டி நிமிர்ந்து.

நீழ்சூர்ந்த நிலவுலகம், நீறுபூத்த நெருப்பு.

நுண்மாண் நுழைபுலம், நுனிப்புல் மே-ச்சலா-.

நூன்மதி து-ப்பிற்கு (சுருதியுக்தி யனுபவங்கட்கு)ப் பொருந்த.

நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி, நெடுஞ்சாண்கிடையா- நிலத்தில் விழுந்து, நெற்றியின் வேர்வை நிலத்தில்விழப் பாடுபட்டு.

நோயும் நொடியும் பாயும்படுக்கையுமா-க் கிடந்து.

பகை

பகலென்றுமில்லாமல் இரவென்றுமில்லாமல் பாடுபட்டு, நட்பு அயல் என்னும் முத்திறத்தும் ஒத்து, பட்டபாடும் கெட்டகேடும், பட்டிமாடுபோற் கட்டுக் காவலின்றிச் சுற்றித்திரிந்து, படைநாலும் புடைசூழ, படைப்புக்காப் பழிப்பு, பணத்தைப் பணமென்றும் காசைக் காசென்றும் பாராமல், பருத்த மேனியுங் கருத்த கண்களும், பருந்துங் கிளியும் பாங்கா- வாழ, பல்உடன் உற்றுச் சொல் உடன் கற்று, பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டமாட்டி.