உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பார்த்த கண்ணும் பூத்துப்போ-

பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடு.

புலவர்க்கும் விளங்காப் பொருள், புலனைந்தும் பொறிகலங்கி, புலியும் மானும் ஒருதுறை யுண்ண, புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை.

பொ-யும் புலையும் புனைசுருட்டும்.

'பொல்லாப் புழுமலி நோ-ப்புன் குரம்பை,

பொல்லாரை நீக்கி நல்லாரைக் காத்தல் (து டநிக்கிரக சி டபரி பாலனம்), பொன்னே பூவே கண்ணே கனியே என்று புகழ்ந்து, பொன்னொரு தட்டிலே பூவொரு தட்டிலே வைத்துப் போற்றி.

மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவர், மணி மந்திர மருந்து, மயிலாடக் குயில்பாட மணங்கமழும் மலர்ச்சோலை, மலை யிலக்கு, மலைவிழுங்கி மகதேவன், மனமொழி மெ-கள் (மனோ வாக்குக் காயங்கள்), மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணி, மனம் போன போக்கெல்லாம் போ-

மாடமாளிகை கூடகோபுரம், மானங்கெட்ட மழுங்கல்.

முயற்கோடும் குதிரைக்கொம்பும், முன்னுக்குப்பின் முரண்பட. மேலெழுந்தவாரியாகப் படித்து.

மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோட்டு.

யாருக்கு வந்த விருந்தோ என்றிருந்து.

வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவரா-, வடிகட்டிய முட்டாள், வயிறொட்டி வா-புலர்ந்து, வரம்வாங்கி வந்தவன், வழிதுறை தெரியாமல், வழிமேல் விழிவைத்து.

வா-க்கெட்டினது வயிற்றுக்கெட்டாமல், வாழ்நாளை வீழ்நாளாக (வீணாளாக)க் கழித்து, வாழையடி வாழையா வந்த, வானுறவோங்கி வளம்பெற வளர்ந்து.

விண்ணோர் புகழ மண்ணோர் மகிழ, விதித்தன செ-து விலக்கி யன ஒழித்து, விலாப்புடைக்க வுண்டு.

வெட்டவெளிச்சம் பட்டப்பகலா- விளங்க, வெண்சாமரை வீசி ஆலவட்டம் பரிமாறி, வெள்ளிடைமலை, வெள்ளிடை மலைபோல் தெள்ளிதில் தெரிய, வெறுவா-ச் சொல்வீரர்.

வேதாகம புராணேதிகாசங்கள்.