உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல

3

கட்டுரையியல்

(WRITTEN COMPOSITION)

1. குற்றங்களும் குணங்களும்

சொற்றொடர்களைப் பொருட்கோவைபடத்

தொடுத்து,

உரையாட்டும் கடிதமும், ஆவணமும் (பத்திரமும்) கதையும் கட்டுரையும் நூலுமாகப் பல்வகை எழுத்தீடுகளை வரையும்போது, பத்துவகைக் குற்றங்களையும் நீக்கிப் பத்துவகை அழகுகளையும் அமைத்து வரைதல் வேண்டும்.

பத்துவகைக்

குற்றங்கள்

1. குன்றக் கூறல்

குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டிய சொற்களினுங் குறைவுபடச் சொல்லுதல், குறித்த பொருளைப் பற்றிக் கொஞ்சமாகக் கூறுதல்.

2. மிகைபடக் கூறல் -குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களினும் மிகுதியாகச் சொல்லுதல். குறித்த பொருளைப்பற்றி அதிகமாக (அளவுக்குமிஞ்சி)க் கூறுதல்.

3. கூறியது கூறல் - சொன்ன பொருளையே திரும்பச் சொல்லுதல்.

4. மாறுகொளக் கூறல் - முன்னுக்குப்பின் முரண்படச் சொல்லுதல்.

5. வழூஉச்சொற் புணர்த்தல் குற்றமுள்ள (தவறான) சொற்களை யமைத்தல்.

எ-டு: எம்பழது, ஏஷு, குதவளை, தவக்களை, தேழ்வை, ரெம்ப.

6. மயங்கவைத்தல் பொருள் தெரியாமல் மயங்கவும், பொருள் இதுவோ அதுவோ என ஐயறவும் வைத்தல்.