உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

43

குறிப்பு: உலக மலையாமையில், இடமலைவு கால மலைவு கலைமலைவு உலக மலைவு நியாயமலைவு ஆகம

மலைவு

என்னும் அறுவகை மலைவு விலக்கும்

அடக்கப் பெறும்.

ஓரிடத்திற்குரிய பொருளை வேறோரிடத்திற்குரியதாகக் கூறுவது இடமலைவு; ஒரு காலத்திற்குரிய பொருளை வேறொரு காலத்திற் குரியதாகக் கூறுவது காலமலைவு; ஒரு கலைக்கு மாறாகக் கூறுவது கலைமலைவு; உலகியற்கு அல்லது உயர்ந்தோர் வழக்கிற்கு மாறாகக் கூறுவது உலகமலைவு அல்லது உலகியல்மலைவு; ஏரணத்திற்கு (தருக்க நூலுக்கு) அல்லது பகுத்தறிவிற்கு மாறாகக் கூறுவது நியாய மலைவு; அறநூலுக்கு மாறாகக் கூறுவது அறமலைவு அல்லது ஆகம மலைவு.

ஒவ்

2. பாகியமைப்பு (Paragraph Structure) எப்பொருளைப்பற்றி யெழுதினாலும், அப் பொருளைப்பற்றிய கருத்துகளையெல்லாம் கோவைபட அமைத்துக்கொண்டு, வொன்றையும்பற்றி இயன்ற அளவு அல்லது வேண்டுமளவு, தனித்தனி பகுதியாக ஒவ்வொரு வாக்கியத்தொகுதி வரைவது பாகியமைப்பு அல்லது பாகிவரைவு ஆகும்.

கடிதம் கட்டுரை ஆவணம் (பத்திரம்) முதலியன பாகியமைப் பையே பாகுபாடாக் கொண்டிருக்கும். நூலாயின், அதிகாரம் இயல் முதலிய பிரிவுகளாக வகுக்கப்பட்டு, அவற்றுள் ஒவ்வொரு சிறு பிரிவும் பாகியமைப்புடையதாக விருக்கும்.

பாகியமைப்புடன் எழுதப்பட்ட எவ்வகை எழுத்தீடும், படிப் பதற்கு வசதியாகவும் பொருள் எளிதா- விளங்குவதற்கு ஏதுவாகவும் பார்வைக்கு நன்றாகவும் இருப்பதால், உரைநடையில் எழுதும் எல்லாவற்றையும் பாகியமைப்புடனே எழுதுதல் வேண்டும்.

ஒரு பாகியின் இறுதி முழுவரியாகவும் இருக்கக்கூடுமாதலால், ஒரு பாகிக்கும் இன்னொரு பாகிக்கும் இடையீடு பார்த்தவுடன் தெளிவா-த் தெரியுமாறு, ஒவ்வொரு பாகியின் முதல் வரியும் சற்று வலமாகத் தள்ளித் தொடங்கப்பெறும்.