உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பாகியமைப்பு நெறிமுறைகள் (Principles of Paragraph Structure)

பாகியமைப்பானது, கருத்தடைவுபற்றிய ஏரண முறைப்பட்டதே யன்றி, அவரவர் விருப்பம் போலச் செயற்கை முறையா-ப் பகுத்துக் கொள்வதன்று. ஆகையால், பாகியமைப்புப்பற்றிய சில திட்டமான நெறிமுறைகள் தெரிந்துகொள்ளல் வேண்டும். அவையாவன:

1.ஒருமைப்பாடு (Unity)

ஒரு வாக்கியம் ஒரே உண்மையை அல்லது விதியைப்பற்றி யிருத்தல்போல; ஒரு பாகியும் ஒரே பொருளை அல்லது பொருட் கூறாகிய கருத்தைப்பற்றி யிருத்தல் வேண்டும். இது பாகியொருமைப் பாடு எனப்படும்.

எப்பொருளாயினும், பல கருத்துகளைத் தழுவினதாக அல்லது உள்ளடக்கினதாகவே யிருக்கும். அவற்றுள் ஒவ்வொன்றையும்பற்றி ஒவ்வொரு பாகி வரைதல் வேண்டும். ஒரு கருத்துப் பல உட்கருத்து களைக் கொண்டதாயின், அவற்றுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாகியமைத்தல் வேண்டும்.

2. ஒழுங்கு (Order)

பாகியமைப்புப்பற்றிய இரண்டாவது நெறிமுறை கருத்தொழுங் காகும். இது பாகியொழுங்கு எனப்படும். இஃது அகவொழுங்கு புறவொழுங்கு என இரு திறத்தது. ஒரு பாகிக்குள்ளே யமைந்திருக்கும் கருத்தொழுங்கு அகவொழுங்கும், அதற்குப் புறமாக, முன்னும் பின்னும் அமைந்திருக்கும் கருத்தொழுங்கு புறவொழுங்கும் ஆகும்.

முதலாவது, ஒரு கட்டுரையின் பல பாகிக் கருத்துகளும், முன் பின் முறை பிறழாது ஏரணத் தொடர்ச்சியா யிருத்தல் வேண்டும். இரண்டாவது, ஒவ்வொரு பாகியினுள்ளும் அமைந்திருக்கும் வாக்கி யங்கள், அவ்வப் பாகிக் கருத்துப்பற்றி ஏரணத் தொடர்பு பூண் டிருத்தல் வேண்டும்.

பொதுவாக, ஒரு பாகியின் முதல் வாக்கியம் பாகிக் கருத்தைத் தொடங்கல் வேண்டும். அதன் இறுதிவாக்கியம் அதை முடித்தல் வேண்டும். இடையிலுள்ள வாங்கியங்களெல்லாம், பொருள் தொடர்ச்சி குலையாது பாகிக் கருத்தை வளர்க்கவோ விளக்கவோ வற்புறுத்தவோ