உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

45

வேண்டும். பாகிக் கருத்து அமைந்திருக்கும் வாக்கியம் கருத்து வாக்கியம் (Topical Sentence) அல்லது திறவு வாக்கியம் (Key Sen- tence) எனப்படும். இது பாகியின் முதலிலாவது இடையிலாவது இறுதியிலாவது இருக்கலாம். முதலிலிருப்பது தலையாயது; இடையி லிருப்பது இடையாயது; இறுதியிலிருப்பது கடையாயது. முதல்

வாக்கியம் படிப்பவர் உள்ளத்தைக் கவர்ந்து அவரது ஆர்வத்தை யெழுப்புவதாயும், இடை வாக்கியங்கள் அவ் வார்வத்தை மேலும் மேலும் வளர்ப்பனவாயும், இறுதி வாக்கியம் அதைச் சால்வு (திருப்திப்) படுத்துவதாயும், இருத்தல் வேண்டும். பிஞ்சு தோன்றிக் காயா-ப் பருத்துக் கனியா-ப் பழுத்தாற்போல, பாகிக் கருத்தும் முன்பு தோன்றி முறையே வளர்ந்து முடிவில் முதிரவேண்டும்.

பாகிப்பொருள் ஒரு வரலாறாயின், பாகி வாக்கியங்கள் அவ் வர லாற்று நிகழ்ச்சிகளை முறை பிறழாது தொடர்ந்து கூறுதல் வேண்டும். 3.வகைப்பாடு (Variety)

பாகியமைப்பின் மூன்றாம் நெறிமுறை வகைப்பாடு. அஃதாவது, பாகி களெல்லாம் ஒரு கோவையின் அல்லது மாலையின் செ-யுள் களைப் போல் ஒரே யளவா யிராது, குறிதும் நெடிதுமாக வெவ்வே றளவாயிருத்தல். இது பாகி வகைப்பாடு எனப்படும். ஒரு பாகியின் அளவு அதன் கருத்தைப் பொறுத்திருத்தலால், பாகிகளெல்லாம் தாம் கூறும் கருத்தின் ஒடுக்க விரிவிற் கேற்றவாறு குறுகியும் நீண்டு மிருக்கும். ஒரு பாகி ஒரு வாக்கியத்தினாலும் அமையலாம்; பல வாக்கியங்களினாலும் அமையலாம். அதன் சிற்றெல்லையே யன்றிப் பேரெல்லை திட்டமாக வகுத்தற்குரிய தன்றாயினும், அஃது ஒரு பக்கத்திற்கு மிகாதிருத்தல் நல்லதாம். மிக விரிவுபட்ட பாகிப் பொருள் பல கருத்துகளாகப் பிரித்துக்கொள்ளுதற்கு இடந்தருமாதலின், ஒரு பக்கத்திற்கு மேற்படும் கழிநெடும் பாகியைப் பல சிறு பாகிகளாகப் பிரித்துக்கொள்வது நன்று. பாகியமைப்பின் பயன் படிக்கை வசதியும் பொருள் தெளிவுமாதலின், அப் பயன் கெடுமாறு பாகிகளை வரை கடந்து நீட்டுதல் தகாது.

ஒரு பாகியின் இடையில் மேற்கோட் செ-யுள் வருமாயின், அதைத் தனித்து வரைதல் வேண்டும். அஃதாவது, செ-யுள் வடிவு கெடாமல் புதுவரியில் தொடங்கி, ஒவ்வோர் அடியையும் அல்லது அடிப்பகுதியையும் தனி வரியா- வரைதல் வேண்டும். ஒரே அடி அல்லது அடிப்பகுதியாயின், பாகியொடு சேர்த்தும் வரையலாம்.