உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இதுகாறும் கூறியவற்றின் தொகுப்பு:

பாகியமைப்புப்பற்றிய முக்கிய நெறிமுறைகள், 1. வலந்தள்ளித் தொடங்கல், 2. கருத்தொருமை, 3. கருத்தொழுங்கு, 4. அளவு வேறு பாடு, 5. மேற்கோட் செ-யுளின் தனி வரைவு என ஐந்து.

கவனிப்பு: மாணவர், வீட்டிலும் வகுப்பறையிலும் எழுதும் எவ்வகை வரைவுப் பயிற்சியையும் எழுத்தீட்டையும், இறுதியில் ஒருமுறை பார்த்தலும் பிழை திருத்தலும் வேண்டும். பிழை மலிந் திருப்பின், முழுவதையும் மீண்டும் திருத்தமா- வரைதல் வேண்டும். இயலுமிடமெல்லாம், முதலில் காட்டு வரைவு (Rough draft) வரைந்து கொண்டு பின்பு அதைச் செவ்வைப் படி (Fair copy) செ-துகொள்வது நன்று. மேற்கூறிய பாகியமைப்பு விதிகளை விளக்கும் எடுத்துக் காட்டுகள் சில வருமாறு: (i) அகவொழுங்கைக் காட்டும் தனிப்பாகிகள்

1. "இனி, இசைக்குரிய பாடல்கள் எம்மொழியில் இருக்க வேண்டும் என்பதைப்பற்றிச் சில கூற விரும்புகின்றேன். இஃது ஏதுக் கள் இன்றியே எளிதில் உணரத்தக்கதொன்று. மக்களுக்குரிய நாட்டு மொழியில் இருப்பது இன்றியமையாதது. வேற்று மொழியில் அமைந்த பாடல்களைக் கேட்டெ-தும் இன்பம், இசையின் தனிநிலையில் எ-தும் இன்பத்தினும் சிறந்ததாகாது. வேற்றுமொழிப் பாடல்களும், சாகித்திய சம்பந்தமில்லாத இசையும், இசைக்கருவிகளின் மூலம் கேட்கப்படும் கீதமும், ஒத்த தன்மையனவேயாம். சுவைக் கருத்து களைத் தன்மயமாக உணர்ந்து அனுபவிப்பதற்குத் தா-மொழிப் பாடல்களே ஏற்றனவாம். கேட்கும் மக்களுட் பலர் தமக்குரிய மொழிப் பாடற் கருத்துகளை உணர்தற்கே தகுதியில்லாதவரா யிருக்கும் இக்காலத்தில், சிறிதும் பொருள் விளங்காத வேற்றுமொழிப் பாடல்கள் அவர்க்கு எவ்வாறு பயன்படும்? சில இசையரங்குகளில், பொருள் விளக்கமில்லாத வேற்றுமொழிப் பாடல்களைக் கேட்டுத் தலை யசைக்கும் குழுவைக் காண்கின்றோம். அக் குழுவிற் பலர், இசையின் இயல்பையோ பாடற்பொருளையோ அறியும் தகுதியுடையாராக இருக்கமாட்டார். ஏதோ இசைக்கலையில் தமக்கு அறிவுண்டென்று பிறர் மதிக்கவேண்டும் என்னும் குறிக்கோளே, அன்னார் தலைநடுக்கத் திற்குக் காரணமாகும்.'

கதிரேசச் செட்டியார்