உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

47

இது, இசைப்பாட்டு தா-மொழியி லிருத்தல் வேண்டும் என்னும் கருத்துப் பற்றியது. இதன் முதல் வாக்கியம், ஒரு வினாவின் வாயிலாக அறிவேட்கையைத் தூண்டி ஆர்வத்தை எழுப்புகின்றது. இடை வாக்கி யங்கள், அவ் வினாவிற்கு விடையும் அவ் விடைக்கு ஏதுவும் விளக்க முங் கூறுகின்றன. இறுதி வாக்கியம், வேற்றுமொழிப் பாட்டு நுகர்ச்சியின் போலித்தன்மையை எடுத்துக்காட்டி, பாகிக் கருத்தை வற்புறுத்து கின்றது.

2. "இந்தக் காட்சிகளை எங்கோ நாடகத்தில் கண்டதாக எண்ண வேண்டா. தொல்காப்பியத்தில், தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங் களின் வகைகளைச் சொல்லும் பகுதியில், தலைவனைப் பிரிந்த தலைவிக்கு ஆறுதல் கூறும் செவிலித்தா உபயோகப்படுத்தும் இலக்கியங்கள் இன்னவை என்ற விஷயம் சில சூத்திரங்களில் சொல்லப்படுகின்றன. அவற்றிலும் அவற்றின் உரைகளிலும் உள்ள செ-திகளை ஊன்றிக் கவனிக்கும்போது, மேலே சொன்ன காட்சி களை நம் அகக்கண்ணில் காண்கிறோம். ஆனைக்கதை போன்ற கதைகளுக்கு, 'பொருளொடு புணராப் பொ-ம்மொழி' என்றும்; சிரிப்பு மூட்டும் கதைகளுக்கு, 'பொருளொடு புணர்ந்த நகைமொழி' என்றும்; விடுகதைகளுக்கு, 'பிசி’ என்றும்; நாடோடிப் பாட்டுகளுக்கு, 'பண்ணத்தி' என்றும்; பெயர்கள் பழங்காலத்தில் வழங்கினவென்று தெரிகிறது. 'தலைமகளை வற்புறுத்தும் செவிலியர் உரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரிய'வை இவை என்று உரையாசிரியர் எழுதுகிறார்.”

கி. வா. ஜகந்நாதன்

இது, தொல்காப்பியம் கூறும் செவிலித்தா- கூற்றுவகைகளைப் பற்றியது. இதன் முதல் வாக்கியம், படிப்போர் மனத்தைப் பற்றியது. இதன் முதல் வாக்கியம், படிப்போர் மனத்தைப் புதிதா- ஓரிடத் திற்குக் கவர்ச்சியுடன் திருப்புகின்றது. இடைவாக்கியங்கள், அத் திருப்பப்பட்ட இடமாகிய தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ள சில செ-திகளைக் கூறுகின்றன. இறுதி வாக்கியம், அவற்றைப் பற்றிய உரையாசிரியர் விளக்கக் கருத்தைக் கூறிப் பாகிக்கருத்தை அழகு பெற முடிக்கின்றது.

3. "தேள்கள் இரவில் இன்புற்று வாழ்ந்த வீட்டின் மேற் கூரையாகும் கல்லை மறுநாட் காலையில் புரட்டினால், அங்கே பெண் தேள் மட்டிலும் காணப்படும். ஒருவேளை ஆண்தேளின் காலோ